For Daily Alerts
Just In
இயந்திரமயம்
- பாரதிமோகன்
மனிதன்
புதிது புதிதாய்
வாங்கியதெல்லாம்
(மி்க்ஸி.. கிரைண்டர் இத்யாதி...)
பழுதுபட்டு கிடக்குது
ஆயினும்
இன்றும் உறுதியோடு
இருக்கும் எங்களை
(அம்மி ஆட்டுரல்.. இத்யாதி...)
தீண்டுவாறுமில்லை
சீண்டுவாறுமில்லை
கவலையோடும்
கண்ணீரோடும்
மனிதனிடம் போய்கேட்டால்
மனிதன் சொன்னது
இன்னும் கவலையளிக்கிறது
''எல்லாம் மாறிவிட்டது
இப்போது
இதயம் கூட எங்களுக்கு
இயந்திரத்தில்..''
- பாரதிமோகன் [email protected]
Comments
Story first published: Friday, March 14, 2008, 12:36 [IST]