விடுகதை...
ஹலோ... ஹலோ...
நலமா?...
நான் நலம்.... நீங்கள்?...
நானும் நலமே...
என்ன வேலையா?...
இல்லை...
தங்களை நினைத்து கொண்டிருந்தேன்...
நீங்கள் அழைத்து விட்டீர்கள்...
ஓ... அப்படியா?...
பாடுவாயா ?...
நீங்கள் ?...
ஓ..... இந்த மான் உந்தன் சொந்த மான்....
நல்லா இருக்கு உங்க குரல்...
நீ பாடேன்...
ம்ம்ம்ம்..... யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே ...
நல்லா பாடின...
நன்றி...
விடுகதை ஒன்று கூறுகிறேன்...
நீ விடை கூறு...
விளக்குகள் இல்லை...
இருப்பினும்...
என் அறையும் ... தொலைபேசியும்...
பிரகாசிக்கிறது !...
எதனால் ?....
எப்படி?...
ம்ம்ம்ம்..... ஒன்றுக்கு காரணம்...
“முன் (நிலவு)" அடுத்தது “நானா" ?...
செல்லம்....
சரியான விடை...
அடுத்த விடுகதை சொல்கி..........
......ஹலோ... ஹலோ... ஹலோ...
தொலைபேசி துண்டிக்கப்பட்டது....
இணைப்பு கிடைக்கவில்லை...
இன்று வரயில்...
இது தான்...
அவர் போட்ட...
விடுகதையோ ?
விடை ...
தெரியவில்லையே?...
-அனாமிகா பிரித்திமா([email protected])