கொஞ்சமா பிரிவினைகள்....
சிகப்புகம்பள காஷ்மீரத்தை
குருதியால் நிரப்பும் குரூரம்
நக்சலைட்டுகளின் களிநடனத்தில் ஆந்திரம்
காவிரியை தடுத்துநிறுத்தும் கர்நாடகம்.....
இப்படி எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட
வரலாற்று நாகரிகம்
பிரிவினையின் தொடரோட்டம்
எங்கும்- நமக்குள்கூட
நேற்றைய இரவில்
நிகழ்ந்த சாதிச்சண்டையின் முடிவில்
உன் சாதியும், என் சாதியும்
தங்களைப்புதுப்பித்துக்கொண்டன- முன்னிலும் வலிதாய்
நம் நட்பின் முகம்கூட கிழிக்கப்பட்டது...
நீயும் நானும் கூட அடித்துக்கொண்டோம்
சாதி முகம்கொண்டு
சாதி இரண்டொழிய .. என்றவனும்
சாதிகள் இல்லையென்றவனும்- இங்கில்லையென்பதால்
எனக்கு பாரதியும் புரியவில்லை வரலாறும் புரியவில்லை
போய் வா நண்பா
முன்னூறுகோடி முகம்
எனக்கான ஒரு புதிய நண்பனையும்
ஒரு புதிய எதிரியையும் நான் தேடிக்கொள்வேன்
நீயும் அப்படியே...
உலகத்தின் எல்லாமூலையிலும்
அரசியல், அண்டைநாடு, சாதிச்சண்டை
இவைகளின் முடிவிலெலாம்
உன்னையும் என்னையும் போலவே
சண்டையிட்டு பிரியும் நண்பர்கள்...
போய்வா நண்பா
நாளைய புதிய நண்பனையும்
புதிய எதிரியையும் தேடி.....
-ரிஷி சேது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications