For Daily Alerts
Just In
தடுப்பூசி மரணங்கள்!

கண்டம் பாயும்
அழிவுச் சக்திமிக்க
ஏவுகணைகள்!
வானிலும்
ஒற்றர்களாய்
விண்கோள்கள்!
விண்ணில் மண்ணில்
நீரில் பயணம் செய்திட
புதுமைகள் மிக்க
வாகனங்கள்!
உலகின் நிகழ்வுகளை
உடனே அறிந்திட
தொலைக்காட்சி
வானொலிகள்!
பூவுலகின்
மூலைமுடுக்கெல்லாம்
தொடர்பு கொண்டிட
தொலைபேசி செல்பேசிகள்!
பரந்த பூபாளத்தைச்
சிறு அறைக்குள்
சுருக்கி விட்ட
தகவல் தொழில் நுட்பம்!
வெப்ப குளிர் பிரதேசங்களில்
வசிப்பவர் வசதிக்காக
குளிரூட்டி
வெப்பமூட்டிகள்!
பழுதடைந்த
உறுப்புகளுக்குப் பதில்
மாற்றுறுப்பு
பொருத்தங்கள்!
இன்னும் சொல்லிமாளா
எத்தனை யெத்தனையோ
சாதனைகள் புதுமைகள்
இவ்வறிவியல் யுகத்தில்!
இருப்பினும்
அடிக்கடி நிகழ்கின்றன
நோய்தடுப்பு மருந்துகளால்
மழலையரின் மரணங்கள்!
இவற்றுக் கெல்லாம்
யார் பொறுப்பு?
எப்படி தவிர்க்கப் போகிறோம்?
- இமாம்.கவுஸ் மொய்தீன் drimamgm@hotmail.com