'கிழிந்த நோட்டு'
Subscribe to Oneindia Tamil
-முத்தாசென் கண்ணா
இடது வலமாக மடித்தேன்
குறுக்கு நெடுக்குமாக மடித்தேன்
ஓரங்களை மடித்து
நடுவில் விரல் வைத்துப் பார்த்தேன்
எப்படி மறைத்தாலும்
மறைவதாய் இல்லை
பத்து ரூபாய் நோட்டி்ன் கிழிசல்
நேராக மடித்து நிமிர்த்து நீட்டினேன்
கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல்
சீட்டைக் கி்ழித்தார் நடத்துனர்
எப்படியோ ஏமாற்றிவிட்டேன் என்று
கர்வப்பட எத்தனிக்கையில்
சில்லரையாக வந்து சேர்ந்தது
அதைவிடக் கிழிசலான
ஐந்து ரூபாய் நோட்டு.........












Click it and Unblock the Notifications