அம்மா எனும் தெய்வ விருட்சம்
(Since our beloved mother passed away in 15th February (She was everything for us), we are publishing a memorial book on her 31st rememberance day (my brother has created a website: http://www.vannamani.com/ and it will be updated further after 20th March). I wrote this poem in the memory of our beloved mother)
அம்மா ..
நீங்கள் இறந்து விட்டீர்களாம்
எல்லோரும் சொல்கிறார்கள் ..
நம்ப முடியவில்லையம்மா!
------
இல்லையம்மா
நீங்கள் இறக்கவில்லை
எங்களோடு வாழ்கிறீர்கள் ...
எங்களை
வழிநடத்தும் தெய்வமாக ...
அம்மா ...
உங்களுயிர் பறித்த ...
கொடிய காலனவன்
எங்களுயிர் கேட்டிருந்தால் ...
கொடுத்திருப்போமேயம்மா
நாங்களெல்லோரும் ...
உங்களுயிர் காக்க
அம்மா ...
மரணம் இயற்கையென்கிறார்கள் ...
உங்கள் மரணத்தின் பின்
இயற்கையே வெறுத்து விட்டதம்மா
எங்களுக்கு
ஏழைகளுக்காக
அள்ளியள்ளிக் கொடுத்த
அன்புத் தெய்வமே ... ஏனம்மா
இவ்வளவு சீக்கிரம்
எங்களை விட்டு ஏன் பிரிந்தீர்கள்?
அம்மா ...
வாரி வழங்குவதில் வள்ளல்
கர்ணனென்கிறார்கள் ...
எங்கள் வாழ்வில்
நாங்கள் கண்ட வள்ளல் ...
நீங்களம்மா
மற்றவர்களுக்காக வாழும்
உயரிய பண்பை ... எப்படியம்மா
கற்றுக் கொண்டீர்கள்?
ஆல விருட்சமாகவிருந்து
எங்களை ...
அரவணைத்துக் காத்த
அன்புத் தெய்வமே ...
பாரினில்
உங்கள் பிள்ளைகள் ... புகழ் பெற
பாடுபட்ட உங்கள்
பொன்னுடல்
எங்கேயம்மா போய் விட்டது?
அம்மா
மாரியம்மனென்றால்
உங்களுக்கு உயிர் ...
அள்ளிக் கொடுத்தீர்களே ... அவளுக்கு
நீங்கள்
கொடுத்தது போதுமென்று
நினைத்து விட்டாளா ... அல்லது
தனக்குதவ
உங்களை அழைத்துக் கொண்டாளா?
ஒன்று மட்டம் நிச்சயமம்மா
இனியெங்கும் வாழ்வில்
நீங்கள்தான் தெய்வம் ... ஆம்
நீங்கள் மட்டும்தானம்மா
-உங்கள் அன்பு மகன்
(Dr K Kobindarajah, Ph.D,
Visiting Assistant Professor,
Memorial University,
Newfoundland, Canada)
-கோபிந்தராஜா ([email protected])
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications