நீ வருவாய் என..,
-மதுக்கூர். முஹம்மது ரூமி
திசைமாறி சென்ற படகை போல...
வாழ்க்கை யெனும் தடத்திற்கு செல்ல திசையறியாமல் தடுமாறினேன்...
திருப்புமுனை குரல் ஒன்று என் செவிகளுக்கு கேட்கவே...
திரும்பிபார்த்தேன்?!?!?.. என் அருகில் நீ!!!
ஈர்ப்புவிசை கொண்ட உன் கரங்களோடு... என் கரங்களும் இணைய....
நம் பயணத்தை தொடர்ந்தோம்...
மகிழ்ச்சி யெனும் மறு உருவத்தை அப்பயணத்தின் பொழுது தான் கண்டேன்...
நாம் கடந்துக் கொண்டிருக்கும் பாதையில்!!!
காழ்ப்புணர்ச்சி கொண்ட காளான்கள் செய்த சதி "பிரிவு" என்னும் விபத்து....
'வலி" எனும் சொல்லுக்கு பொருள் உணர்ந்தேன்...அன்று...
நீ சிக்கி விட்டாயே அந்த வலையில்...
உன் சிறகுகளை சிறையிட்டுவிட்டார்களே...கூக்குரலிடும் என் குரலை நீ செவியேற்க் முடியாமல்!!
உன் செவிகளை செப்பணித்து விட்டார்களே...
அந்தோ பரிதாபம்...
தடை போடும் அந்த கற்கள் அறியுமோ... உண்மையான பாசத்தை...
காலம் கனியும் போது அக்கற்களும் கறையும்...
மீண்டும் நாம் பயணிப்போம்...நமது பாதையில்...
நம்பிக்கையுடன் நான் திரும்பிபார்க்கிறேன்... தோழி!!!
நீ வருவாய் என..
-மதுக்கூர். முஹம்மது ரூமி([email protected])
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications