எங்கள் விடியல் எப்போது?
Subscribe to Oneindia Tamil

ஆணைப் பொருத்தவரை
இறைவன் படைத்த அழகான கவிதை !
வாசித்து ரசிக்க மட்டுமே !
சமையலறையை விட்டு வெளியேறி
நூற்றாண்டுகள் கடந்து விட்டது
ஆனால் இன்னும்
ஆணின் சட்டைப் பைக்குள்
இருந்து வெளியேற இயலவில்லை !
சோறும், குழம்பும்
கணவனுக்கு பிடித்தமாதிரி
சமைக்க வேண்டும் !
அலங்காரம் கூட
அவனுக்கு பிடித்த மாதிரி
இருக்கவேண்டும் !
பேச்சில் கூட
பெண்ணிற்கு என்று
பிடித்தமானது என்று எதுவும் இல்லை !
இனி ஒவ்வொரு முறை
சுவாசிக்கும் போதும்
கேட்க வேண்டுமோ என்னவோ?
இத்தனை இடைஞ்சல்கள்
பெண்ணுக்கு இருந்தும்
ஆண்டுதோறும்
பெண்கள் தினம் கொண்டாடுவது மட்டும்
மாறுவதே இல்லை!
பெண்கள் தினத்தன்று
பெண்களுக்கு ஒன்றும் சிறப்பில்லை!
சலுகை விலையில்
பொருட்களை வாங்குவதைத் தவிர!












Click it and Unblock the Notifications