தினந்தோறும் காதலர் தினம்!!

Subscribe to Oneindia Tamil

- மயூரா அகிலன்

காதலர் தினத்தன்று
கடற்கரையில் கூடி முத்தமிட்டு
பரிசளிப்பது மட்டுமல்ல காதல்….

ஒவ்வொரு நொடிப் பொழுதும்
காதலோடு வாழ்வதே
உண்மையான காதல்…

கண்களின் சந்திப்பில்
நிகழ்ந்த ரசாயன மாற்றங்களினால்
இதயங்களை பரிமாறிய
இளசுகளுக்கு
காதலர் தினத்தின் கொண்டாட்டம்
ஒருநாளில் முடிந்துவிடும்…

கைத்தலம் பற்றிய காதல் மனைவிக்காக
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உதிரம் சிந்தி உழைத்து…
இதயம் முழுவதும்
காதலை நிரப்பி
வாங்கித் தரும் ஒற்றை ரோசாவில்
தெரியும் உண்மையான காதல்!

இதயத்துடிப்பின் ஓசையிலும்…
சுவாசிக்கும் மூச்சுக் காற்றிலும்…
மூளையில் நிரம்பியுள்ள
ஒவ்வொரு நியூரான்களிலும்...
நேசத்திற்குறியவர்களின் பெயர் மட்டுமே
எழுதப்பட்டிருக்கும்..

அந்த காதலர்கள் கொண்டாடலாம்
தினந்தோறும் காதலர் தினம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+