"அடர்மழை காடு"
சென்னை: வாசகர்களுக்கு ஒரு இயற்கை கவிதை . எழுதியவர் நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு, ஆஸ்டின்.
அடர்மழை காடு
கருமேகம் உடைத்து
மலைமுகட்டில் தெறித்து
அடர் காடெங்கும் அதிர
சிறுதுளி புனலாய்
வழிந்து
பெருவெள்ளமாகும்
நெளிந்து வளைந்து
பாறை தழுவி
வனப்பரப்பில்
ஆற்று படுக்கையாகும்
சிலிர்த்த மரத்தின்
நுனிக்கிளை தழுவி
நீர் அடிவேர் பற்றி பரவும்

அதில்
அக்கானகமெங்கும்
பசுமை நிரப்பும்
இளைத்த கிளையோரம்
இளைப்பாறும் பறவையின்
கூர்த்த நுனியில்
நீர் தாரை ஒழுகும்
சிறுத்த சிறகோடு
பறந்திட்ட எச்சமெங்கும்
விதையாகும்
பெரும் வனமாகும்
நீரை உண்டு கழித்த
மக்கிய புல்லும்
மண்ணில் உரமாகும்
அடர் மயிரோடு
அசைந்து திரிந்த
வரிப்புலி
குருதிகொண்ட வாய் நனைக்கும்
குட்டியோடு
குளிர்ந்த நடுநிசியில்
வெப்பம் வனத்தில் கரைய
மீண்டும் பெரும் மழைக்கு
காத்திருக்கும்
ஒரு
பெரும் காடு
-மாணிக்கம் விஜயபானு
டெக்சாஸ். ஆஸ்டின்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications