தொடர் வண்டியின் நெடுங் கதை...!
- சாந்தி பழனிசாமி
இலட்சியங்கள் பல சுமக்கின்ற மானிடர்களை சுமந்து செல்கிறாயே
உனக்கென்று இலட்சியம் ஏதேனும் உண்டோ!
சிறு குறு வியாபாரிகளின் சங்கம சந்தையாய் விளங்குகிறாயே
அவர்கள் உனக்கு வரிகட்ட வேண்டுமென்று எதிர்பார்த்ததுண்டோ!
கேளாதோருக்கும் பாராதோருக்கும் உதவிக்கரம் நீட்டுகிறாயே

உனக்கென்று உதவ எவரேனும் வேண்டுமென்று நினைத்ததுண்டோ!
அடித்தட்டு மக்களுக்கும் பணக்கார மக்களுக்கும் பலவிதங்களில் உள்ளாயே
உனது அங்கீகாரம்தான் என்னவென்று ஆலோசனை செய்ததுண்டோ!
எல்லா மதத்தவருக்கும் எல்லா மொழியினருக்கும் உரித்தாகின்றாயே
நீ எந்த மதம் உனக்கென்ன மொழி என்று சிந்தித்ததுண்டோ!
ஊரு விட்டு ஊரு செல்கிறாய் நாடு விட்டு நாடு செல்கிறாயே-நீ
உனது பிறந்த இடம் பற்றி பெருமை போற்றியதுண்டோ!
குளிர்சாதன வசதி தேவையில்லை உன்னில் பயணம் செய்கையில்-நீயோ
சுட்டெரிக்கும் வெய்யிலில் காய்கின்றோமென்று முகம் சுழித்ததுண்டோ !
நீ ஆற்றுகின்ற உதவிக்கு ஈடு இணை இல்லை - தொடர்வண்டியே
அதற்கு ஆயிரம் கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது
எங்கள் வாழ்க்கைப் பயணமோ முடியக்கூடியது -தொடர்வண்டியே
ஆனால் உனது பயணமோ முடிவில்லாத தொடர்கதை...!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications