"அவளும்" நானும்!
"என்னாச்சு எங்கே போய்ட்டே"
"இங்கதான் இருந்தேன்"
"இல்லையே.. இத்தனை நாளா காணோமே.. பொய் பேசாதே"
"இல்லடா இங்கதான் இருந்தேன்.. அப்பப்ப வந்தேனே"
"எங்க வந்தே.. இங்க வரலையே"
"இங்க வரலை.. ஆனா அங்கங்க வந்தேனே"
"எதுக்கு இப்படி நாடகம்.. வந்தா ஒழுங்கா வர வேண்டியதுதானே"
"வந்திருக்கணும்தான்.. சரி அதை விடு"
"எப்படி விட முடியும்... எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா"
"சரி சரி.. ஸாரி ஸாரி"
"ஸாரி சொன்னா ஆச்சா"
"அதான் வந்துட்டேன்ல"

"என்னோட கஷ்டம் உனக்குப் புரியுமா.. புரிஞ்சா இப்படி பண்ணுவியா"
"அடடா.. அதான் வந்தாச்சுல்ல.. என்ஜாய் பண்ணு"
"முடியாது.. இப்படி விட்டு விட்டு வந்தா எப்படி பண்றது"
"சரி இனி கரெக்டா வர்றேன்"
"எங்க.. இப்படித்தான் சொல்வ.. பிறகு பழைய கதைதான்"
"அது உன் கையிலதான் இருக்கு"
"எது என் கையில் இருக்கு"
"நான் ரெகுலரா வர்றதும், வராமல் இருப்பதும்"
"நான் என்ன செய்யணும்"
"நீ ஒன்னும் செய்ய வேண்டும்.. நான் வர்ற வழிகளையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாமல் பாதுகாப்பா வச்சிருந்தா போதும்.."
"உண்மைதான்.. என் கிட்டயும் தப்பு இருக்குதான்"
"இருக்குல்ல.. அப்புறம் என் கிட்ட கோச்சுக்கிறே"
"ஸாரிடா.. வெரி ஸாரி"
"இப்ப மட்டும் ஸாரி சொன்னா ஆச்சா.."
"உண்மையிலேயே மனசுக்கு கஷ்டமாதான் இருக்கு.. நான் ஒழுங்கா இருந்தா நீயும் ஒழுங்கா இருப்பீல்ல"
"ஆமா.. இருந்தாலும் நான் என் கடமையை கரெக்டாதான் பண்றேன்.. அப்பப்ப வந்தாலும்.. உன்னை சந்தோஷப்படுத்திட்டுத்தானே போறேன்.. நீ தப்பு செஞ்சாலும் நான் செய்ய மாட்டேன்"
"உண்மைதான்.. நீ ரொம்ப நல்லவன்டா.."
"நீயும் நல்லவதான்.. ஆனா என்ன அப்பப்ப மறந்து போய்டறே."
"சரி.. இனி கரெக்டா இருக்கப் பார்க்கிறேன்"
"அப்பச் சரி.. நான் கரெக்டா ரெகுலரா வர்றேன்.. ஓகேவா"
"டபுள் ஓகே.. "
"அப்ப.. இப்ப என்ன செய்யலாம்"
"என்ன செய்யலாம்னா.."
"டியூப்லைட்டு.. இப்ப எ..ன்..ன.. செய்யலாம்"
"புரியலையே"
"அதான் டியூப்லைட்டு.. ஆஃப் செஞ்சா புரியும்"
"ஓய்.. என்ன கொழுப்பா"
"இல்லை களிப்பு"
"ஆமா.. எனக்கும்தான். ரொம்ப ஹேப்பியா இருக்கு "
"அப்படியா.. எவ்ளோ ஹேப்பியா இருக்கு"
"சொல்ல வார்த்தை இல்லை.. உணர்ந்து அனுபவிக்கிறேன்.. சொர்க்கமா இருக்கு"
"நிஜமாவா"
"ம்.. ஆமா"
"அப்ப அனுபவி"
"நீ போகாமல் கூடவே இருப்பியா"
"முடிஞ்சவரை இருக்கேன்.. "
"முடியாம இப்படியே இரு.. எனக்கு நீ வேணும்"
"ம்.. சரி.. இருக்கேன்"
"கண்ணை மூடி உன்னை உணர்ந்து அனுபவிக்கிறேன்.. என்னை நனைச்சுட்டே இரு.."
மெல்ல நின்று விளையாடிக் கொண்டிருந்தது மழை.. நனைந்தபடி நான்!!
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications