நாட்டெல்லையில் காவலிருக்கும் அஞ்சா நெஞ்சங்கள்.. இன்று ராணுவ தினம்

Subscribe to Oneindia Tamil

- ஆகர்ஷிணி

சென்னை: நாடு காக்க நாடிச்சென்று நாட்டெல்லையில் காவலிருக்கும் அஞ்சாநெஞ்சங்களுக்கு சமர்ப்பணம் இது

அறியா வயதில் கிராமத்தினில்
எப்போதோ வந்து போகும்
எமது கிராமத்து ராணுவ வீரர்களுக்கு
மக்கள் காட்டிய மரியாதை
உடை பார்த்து வியந்த கம்பீரம்
முறுக்கு மீசை கண்டு ஒருமோகம்
திண்ணிய புஜங்கள் தொட்டுப்பார்த்து வியப்பு
ஆசையாய் அனுமதி கேட்டு
தொட்டுப்பார்த்த நட்சத்திரங்கள்
வியப்பூட்டிய மிடுக்கு
ஆசையாய் போட்டுப்பார்த்த தொப்பி

Army day special poem

கணீர்க்குரலின் அதிகாரம்
மிலிட்டரியில் சேர்ந்து விட
மனதுக்குள் விதைத்த ஆசை
வீறு கொண்டு எழுந்தது
விடலைப்பருவத்தில்!
தகுதிகள் என்னவென்று
கேட்டுத்தெரிந்துகொண்டு
தினந்தினம் ஒட்டப்பயிற்சி
கூடத்தில் உடற்பயிற்சி
தோள் புஜங்களை வலிமையாக்கியே
நித்தமும் அழகு பார்த்திட்டேன்
அப்போதெல்லாம் படிக்க மனம் போகவில்லை.
பத்தாம் வகுப்பை முடித்திட்டு
ஆர்வத்துடன் காத்திருந்தேன்
அந்த நாளும் வந்தது..
இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் நாள்தான்.
திருவிழா போலக்கூட்டத்தில்
நாங்களும் போய் எமது திறமைகள்
உடல் தகுதியை நிரூபித்தே
வெற்றிக்களிப்பில் திரும்பிட்டேன்
ஆசையாசையாய் பணியில் சேர்ந்தபோது
எம் வயது இருபதுக்குள்
முதல் முறை சீருடை
அணிகையில் ஏற்பட்ட சிலிர்ப்பு
கண்ணாடி முன் நின்று அழகு பார்த்த
நினைவு என்னை களிப்பூட்டியது
எல்லோரும் எம்மக்கள்
நாட்டுப்பணிக்கே உயிர் அர்ப்பணிப்பு
உறுதிமொழி எடுக்கையில் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒவ்வொன்றும் பசுமை நினைவுகள்
உடலை செம்மையாக்கிய போர்ப்பயிற்சிகள்
மனதை செம்மைப்படுத்திய வீர உரையாடல்கள்
நாளும் எங்களுக்கு போதித்தது
எல்லையில் ஊடுறுவும் எதிரிகளை அழிப்பதும்
அவர்களின் ஆட்டத்தை ஒடுக்குவதுமே
பலப்பல விதங்Kளில் உடல் வருத்தலின்போது கூட
நாட்டுப்பற்றும் எம்மக்கள் மீது பற்றும்
எமது ஆர்வத்தை குறைக்கவில்லை
பலப்பல இடங்களில் பணியிட மாறுதல்கள்.
சில்லிடும் பனிமலைகள் சுமந்திட்ட தளவாடங்கள்
முதுகிலும் தோள்களிலும்
உணவு கிடைத்தபோது உண்டோம்
காடு மலை பாராது
முடிந்தபோது உறங்கிட்டோம்
உறக்கத்திலும் தேவை விழிப்புணர்வு
எந்நேரமும் யாரும் தாக்கலாம்
சற்றே கவனக்குறைவு என்றாலும்
உயிர் போகக்கூடிய சாத்தியங்கள்
கண்ணெதிரே தாக்குதலில்
பறிபோன உயிர் நண்பர்கள்
படுகாயம் அடைந்திட்ட சகதோழர்கள்
வருடமொருமுறை சொந்த ஊருக்கு வந்து
சொந்தங்கள் காட்டிய மரியாதை
குடும்பம் அடைந்த வளர்ச்சி
தங்கைக்கு கல்யாணம் முடித்துவிட
பலவருடங்கள் பணியிலேயே நகர்ந்தபின்னர்
எமது பொறுப்புணர்வு கண்டு முன்வந்து
எங்களுக்கு முடித்தனர் திருமணம்
தாலி கட்டிய கொஞ்சநாளில்
அன்பு மனைவியை பிரிந்து சென்ற
கொஞ்ச நாளில் வந்தது அந்த செய்தி
ஆம். நான் தந்தையாகப்போகும் செய்தி
ஆசையாய் மனைவியை முன் நெற்றியில்
மானசீகமாய் முத்தமிட்டேன்.
அவ்வப்போது கைபேசி உரையாடல்கள்
மனைவிக்கு கணவனாக ஆசையாய்
கற்பனையிலும் மிதக்க முடியவில்லை
பணியிலிருக்கும் இடம் பயங்கரம்
அப்படியே மாதங்கள் ஓடிவிட
குழந்தை பிறந்த செய்தி கேட்டு
ஊருக்கு ஓடியது என் மனம்
ஆயின் கடமை உணர்வும்
நாட்டுப்பற்றும் கட்டிப்போட்டிட
சில மாதங்கள் கழித்தே
பிள்ளைமுகம் கண்டேன்
திரும்ப ஊருக்கு போகையில்
சிறு நெகிழ்ச்சி! ஆனாலும்
ஒவ்வொரு நிமிடமும்
கடமையுணர்வும் நாட்டுப்பற்றும்
மனத்தை பணிநோக்கி செலுத்திடும்
தனிமையில் அறைதனில் இருக்கும் தருணங்கள்
சில நொடித்துளிகள் நினைத்திடும்
படித்துவிட்டு ஊரிலேயே
வேலை பார்த்திருக்கலாமோ
சட்டென்று அறைந்திடும் அடக்கிடும்
இந்த பணியில் சேர
நான் கொண்ட ஆர்வம் பற்று
நாளும் என்னை செலுத்திடுது
எனது தாய்நாடு இந்தியா
எம் மக்களை காத்திடும்
அற்புதப்பணிக்கே எனது
உயிர் அர்ப்பணிப்பு என்று.

ஜெய்ஹிந்த்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+