தந்தையர் தினம் 2020 : தலை முறை கடந்து தணியும் தந்தையின் தாகங்கள்!
இன்று: ரிமோட் கார், மினிபைக், ரோபோ என நான் ஏங்கிய பொருட்கள் யாவும்!!
என் அன்பு மகன் நின் கரம் பட்டு ஓடுகையில் கிடைக்கும்
மகிழ்ச்சியின் போதே உணர்கின்றேன்!

அன்று:பச்சை கலர் கண்ணாடி! கைதட்டி ஆடும் பொம்மை!
மூன்று சக்கர மிதிவண்டி!! என நான் விளையாடும் பொழுது!
கண்டு ரசித்த தந்தையின் சிரிப்பிலுள்ள ஏக்கமும்! பேரானந்தமும்!!
இன்று: பள்ளி! கல்லூரி! பண்டிகை தோறும் புத்தாடை!
பசியறியா உணவு வேளை! பார் காண விரித்த சிறகு!
என நான் வாழும் வாழ்கை யாவுமே!
அன்று: கல்வி கற்கும் வயதில் வேலை சென்று!
கயிறு திரித்து! வீட்டின் வயிறு நிறைத்த!!
சின்னஞ்சிறு சிறுவனின் சிந்தையிலகலா கனா!
ஆருயிர் புதல்வா! அன்னம் முதல் ஆகாயம் வரை!
நாம் லயித்து வாழும் வாழ்க்கையில்! உண்மையில் ஜெயித்ததது!
எந்தையும்! உந்தையும்! அவர்தம் நெடுநாள் ஆசைகளும்!
தலை முறை கடந்து தணியும் மழலையின் தாகங்கள்!!
-பிரபு பாலசுப்பிரமணி
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications