கொரோனா - "இது உலக மொழி"
கண்டம் கடந்து..காற்றில் பயணிக்கும்
ஹைகூ - "கவிதை"
சிறிய வார்த்தையில் அடைபட்ட
வீரியம் மிக்க - "சொல்"

கண்ணில் காண வழியில்லை..!
அலட்சியமாய் கடந்து போக முடியவில்லை..!
பேராசை மனிதனுக்கு..புவியின்
"சலித்துப்போன" செய்தி எது?
எண்ணெய் கிணறு...ஆயுதக் குவியல்
பேசி பயனில்லை..!
கருப்பு..வெள்ளை..சிவப்பு
தோல் நிறத்தில் வேற்றுமையில்லை..!
பொருளாதாரம்..அரசியல் மாற்றம்..
எல்லை பாதுகாப்பு..
எதுவும் உதவ போவதில்லை.!
கிரக பலன்.. கோள் நிலை..
வரும் செய்தி ஒன்றும் பலனில்லை.!
பணத்தில் படுத்துறங்கும்
நாட்டிலும் பரவுது இதன் உயரம்..!
இதில் கரிந்து சாம்பலானது
மனிதனின் - தலை கர்வம்.!
கத்தியின்றி..ரத்தமின்றி..
சத்தமின்றி..யுத்தமொன்று நடக்குது.!
இதில்..
ஆறு கால பூஜை கடவுள்
இன்னும் கருவறை கொண்டிருக்க..
உயிர் வலிக்கு "கண்திறப்பது" எப்போது?
உலக செய்தி பெருக்கெடுத்து ஓடுது
கைபேசி... வலையெங்கும்..!
இதில் பொய்.. புரளி..
கலக்குது - "கழிமுகமாய்"
ஆடு.. மாடு.. கறவை.. கோழி
வாழ்வில் ஒரு மாற்றமில்லை..!
எப்போதோ அரைகுறையாய்..
எங்கேயோ சமைத்தெடுத்த..
சிற்றுண்டி..உறை உணவு தேவையில்லை..!
வீட்டு சமையல்.. கரி சட்டி
சுய சுகாதாரம்.. பாட்டி வைத்தியம்..
இப்பவும் அமிர்தம்..!

காற்றை திணறடிக்கும்
கோடி வாகனம்... தேவையில்லை..!
அலுவல்.. வேலை செய்தெடுக்க
அறிவியல்.. வலை நுட்பம்
சூரிய ஒளி.. மின் வாகனம் அகண்ட வழிப்பாதை..!
ஆரோக்கியம் பேணிக்காக்க
உடற்பயிற்சி.. நடை பயணம்
மிதிவண்டி "வரம்".. என்றும்!
இதில்..
அப்பன் ஆத்தா.. குழந்தை குட்டி..
சொந்த பந்தம்..
நண்பன்.. நாடு..
செவிலியர்.. மருத்துவர்..
பொது சேவை..மனிதநேயம் - "நிரந்தரம்"
கண்டம்..எல்லை தகர்த்தெறிந்து..
புவிக்கு மீண்டும்
உயிரூட்டி..
நல்ல காற்றை சுவாசிப்போம்
இலவசமாய்..!
தனித்திரு...விழித்திரு...!
-மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின். டெக்சாஸ்












Click it and Unblock the Notifications