அஃறிணைகள் உலகில் சட்டமுமில்லை திட்டமுமில்லை!

Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

அஃறிணைகளை நீங்கள்
வேட்டையாடலாம்

பிடிக்கலாம்
அடிக்கலாம்

No laws or plans in animal's world

உதைக்கலாம்
கட்டி வைக்கலாம்

அடைத்து வைக்கலாம்
வளர்க்கலாம்

கொல்லலாம் தின்னலாம்
பட்டினி போடலாம்

தீனி போடலாம்
பழக்கப்படுத்தலாம்

பயன்படுத்திக்கொள்ளலாம்
வித்தை கற்றுக் கொடுக்கலாம்

சொற்கள் சொல்லிக் கொடுக்கலாம்
வாழிடங்களைக்
கைப்பற்றிக்கொள்ளலாம்

வந்தால் துரத்தலாம்
வாங்கலாம் விற்கலாம்

இலாடம் கட்டலாம்
சேணம் பூட்டலாம்

மூக்கணாங்கயிறு போடலாம்
விரையடிக்கலாம்
இனச்சேர்க்கை மறுக்கலாம்

பிறவுயிர்கள்மீது கொண்டுள்ள
பேரன்பினால்தான்
அவை துன்பங்களை
ஏற்றுக்கொள்கின்றன.

ஆனால் அவற்றின் உலகுக்கும்
நீங்களே அரசன் என்று
நினைத்துக்கொள்கிறீர்கள் பாருங்கள்...

அங்கேதான்
தவறிழைக்கிறீர்கள்.

அஃறிணைகளின் உலகில்
அரசனுமில்லை நாடுமில்லை
சட்டமுமில்லை திட்டமுமில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக
அஃறிணைகளை
மனிதன் ஆளவே முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+