இதயம் நனைக்க வந்த ஈகை திருநாளே.. ரமலானே..!
ரம்ஜான் பெருநாளையொட்டி செளதி அரேபியாவில் வசித்து வரும் நமது ஒன்இந்தியா தமிழ் வாசகர் கவிஞர். அபிரேகா (எ )அலாவுதின் கவிதை எழுதியுள்ளார்.
துபாய்: ரம்ஜான் பெருநாளையொட்டி செளதி அரேபியாவில் வசித்து வரும் நமது ஒன்இந்தியா தமிழ் வாசகர் கவிஞர். அபிரேகா (எ )அலாவுதின் எழுதியுள்ள சிறப்புக் கவிதை:
இதயம் நனைக்க வந்த
ஈகை திருநாளே..ரமலானே..
ஓரிறை கொள்கையிலே
உயிர் வளத்து..
ஒப்பில்லா நபி வழியில்
உலகம் செழித்து..

தனித்திருந்து.. பசித்திருந்து..
தர்மம் பல செய்து..
இறையருள் யாசித்தோமே..
இன்னல்கள் களைய பூஜித்தோமே..
முப்பது நோன்பை முழுவதும் பிடித்து..
முழு இரவும் இறைவனை தொழுது
முன் செய்த பாவங்ககளை விலக்கிட
முறையிட்டு அழுதோமே..
குறைகளையெல்லாம் களைந்தோமே..!!
பிறை பார்த்து நோன்பு பிடித்தோம்..
பிறை கண்டே நோன்பை விட்டோம்..
எல்லாப்புகழும் உனக்கே இறைவா.
எல்லா நலன்களும் தருவாய் விரைவா..
சத்திய வேதமாமம் குர்ஆனை
நித்தமும் ஓதினோம்.. நித்திரை நிக்கினோம்..
புத்தாடை சூடி .. புன்னகை கூட்டி
ரமலானை அடைந்தோமே.. என்றும்
ரமலானை போற்றுவோமே..!!
கவிஞர். அபிரேகா (எ )அலாவுதின்
சௌதி அரேபியா.. தம்மாம்












Click it and Unblock the Notifications