தற்கொலை செய்யவில்லை நீ... தற்கொடை செய்தாய்!
-ராச்குமார் பரமானந்தம்
அனிதா
விழிகளையே விளக்காக்கி
வாழ்வின் இருள் கடந்த இளஞ்சுடரே
பட்டினியில் பசியாறி-நோய்வாய்
பட்டினி நம் சாதி மாளாமல் காப்பேன்.
படித்து நானே மருத்துவராவேன்
என கட்டியம் செய்த கண்மணியே

நீட் என்னும் கள்ளப்பருந்தை-சிற்றலகால்
கீரி வெளிக்காட்டிய வெண்புறாக் குஞ்சே.
பச்சைக்கொழுந்தே - உன்
பசுங்கழுத்தை நசுக்கி உயிர் குடித்த
கயிறு -கயிறல்ல கண்ணே -அன்று
பெரியார் அடித்தும் சாகாமல் தப்பிய வெறி பிடித்த மலைப்பாம்பு!
துளித் துளியாய் உன்னுயிரை
பாழுங்கயிறு வதைக்கையில்
எம்செல்லமே நீ துடித்த பெரு வலி வாதை
நினைக்கையிலே பதைக்கிறதே
நெஞ்சை சிங்களன் குண்டாய்
சிதைக்கிறதே. தமிழ் வானெங்கும் தீரா
வலியை விதைக்கிறதே.
தற்கொலை செய்யவில்லை நீ
தற்கொடை செய்தாய் என்பேன்.
உன்னுயிரைப் பிழிந்து எமக்கு
உரமேற்றிய வரமடி நீ
ஒருத்தி படித்து மருத்துவராகும்
உளக்கனவை விடுத்து
ஓராயிரம் ஏழை தமிழ் குருத்துகள்
மருத்துவராகும் பெருங்கனவுக்கே
உதிரம் கொடுத்தாய். உயிர் கொடுத்தாய்.
அனிதா எம் ஆவி மேவிய புனிதா
இனி தா தமிழர் எமக்குள் ஒற்றுமை.
ஏந்துவோம் உன் கனவை உணர்வை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications