மழை ஏன் பெய்யனும் ? .. கற்றவை (2)
- ரிஷி சேது
தன் வேலையை ரசித்து செய்பவர்களை
பார்த்திருக்கிறீர்களா ?
சின்ன சின்ன நுணுக்கங்களோடிருக்கும்
இன்றைக்கு "குட்டே" ல முடிவெட்டும் போது கோயமுத்தூரை
சேர்ந்த தம்பி அப்படித்தான் -
சார் ரொம்ப ஒட்ட வேணாம் சார்
சைடுல ஒட்ட வெட்டுறேன்
மேல கொஞ்சம் நார்மலா இருக்கட்டுமே சார்
வெட்டி முடித்து தலையை என்னோடு சேர்ந்து அவரும் பார்த்தார்
வளர்ந்துரும் சார் பத்துநாள்ல -
வேற மாஸ்க் வேணுமா சார்?

ஒரு மெரூன் கலர் சட்டைபோட்ட
சின்ன பாப்பா -பக்கத்துல மயிலிறகு
நனைந்த மண் தரை
குழியில் தேங்கிநிற்கும் மழைநீர்
பாப்பா சைடிலிருந்து ஒற்றை படகை நீரில் வைப்பதுபோல் உள்ள படம்
அவரை தேடிப்பிடித்து பார்த்தேன் - சட்டை கிழிந்திருந்தது
ஆர்ட் நல்லாருக்கேன்னேன் - டீ குடிக்கலாமா ? "லாம்" என்றேன்
அது நம்ம பாப்பாதான் சார் ...
சிரித்த படியே சத்தமாய் டீயை உறிஞ்சினார்
ஒரு நல்ல மழை நாள்
பூட்டு திறக்கவேயில்லை - மரக்கடைக்கு பக்கத்து சந்தில்
எப்போதோ பூட்டு சாவி "ரிப்பர் " என்று தவற்று தமிழிலும்
படமெடுத்த பாம்பின் வளைவான தெலுங்கிலும் இருக்கும்
அவர் ஞாபகம் -ஓடினேன் எதுத்த கடையில்
கைலியை தூக்கி தொடையிடுக்கில் சொருகியபடி தலையிலிருந்து நீர் வழிய நின்றிருந்தார்
அண்ணா, பூட்டு? - "போலாம்"னார்
ஓடிப்போய் "அஜித்" போஸ்டர் போட்டு மூடியிருந்த பெட்டியை தொறந்தார்
பாத்ரூமா மெயின்டோரா -"மெயின்" னேன்
காம்பௌண்ட் செவத்துல வீடு படம் வரைந்திருந்தது
கதவுகளும் சன்னலுமாய்
நம்மூடுதான் -யாரும் தொறக்க முடியாதுல்ல ... சிரித்தார்
மழை நெஞ்சுக்குள் இறங்கியது
வழியில் பூக்காரக்கா எப்போதுமிருமும் கிழவர் என
கடக்கிறேன்- நனைகிறார்கள்
கோர்ட் வாசல்ல , பஸ்டாண்டுல
அப்புறம் பூட்டப்பட்ட "திடீர்" பிள்ளையார்கோவில்வாசல் இப்படி
அவர்களுக்கு இடம் - நட்பு -சாப்பாடு தூக்கம் கலவி எல்லாம்
ஓட்டு ராஜாக்கள் இவர்கள்தான் -
பூட்டு மூன்றாவது சாவியில் "கிரீச்சோடு" திறந்தது,
எண்ணைபோட்டு
கருப்பு கலரிலிருந்த வெள்ளை துண்டால் துடைத்தார்
"பத்துரூவா"- கிரீஸ் கையை நீட்டினார் - கொடுத்து உள்ளேபோய்
துண்டு கொண்டுவரேன் -ஆள் நடந்துபோய்க்கொண்டிருந்தார்
எளியவர்களின் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது -
வேகமாய் வண்டில போய், வாங்க
கொண்டுவிட்றேன் னேன் -இல்ல தம்பி போய்கிறேன் னார்
சட்டுனு திரும்பிட்டேன் -இன்னமும் நினைக்கிறேன்
மழை ஏன் பெய்யனும் ?
[பகுதி : 1]
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications