கற்றவை.. 3
- ரிஷி சேது
எனக்கு சில விளையாட்டுகள் பிடிக்கும்
வாலிபால் அதிலொன்று , பள்ளியில் விளையாடும்போது
எனக்கு சென்டரில் விளையாட ஆசை
உயரமாயிருப்பதால் நெட் அருகிலேயே நிக்கனும்
ஷாட் அடிக்கலாம் சர்வீஸ் கிடைக்காது
அப்புறம் ரங்கசாமி சார் என்னை ஷாட் பாலில் போட்டார்
கிரிக்கெட்டுக்கு அண்ணன் அந்த விளையாட்டு
பந்தை அடித்துவிட்டு மட்டையை போட்டுவிட்டு ஓடணும்
நாலு மூலையில் squre ஆ ஒவ்வொரு ஸ்டாப்பிற்கும் ஆளிருக்கும்
நமக்கு முன்னே அடித்தவர்கள் , கடைசி point ல நிற்பவர் தான் ரன் சேர்க்கமுடியும்

ஒருநாள் பால் அடித்துவிட்டு மட்டையை வீசிவிட்டு அவசரமாய் ஓட
ஒரே சத்தம் , நீலகண்டனுக்கு மூக்கில் அடி ,
பேட் பட்டு.... ரத்தம்
HM அப்பாவ வரச்சொல்ல பெரிய பிரச்சினை
கொஞ்சநாள் விளையாட்டை ஒத்தி போட்டேன்
விளையாட்டை பார்க்க கூட போவதில்லை
அப்படியான ஒரு நாளில் 8th A class பெரியசாமி அறிமுகமானான்
சின்ன வயசு கமல் மாதிரி இருப்பான்
நகைஎல்லாம் செய்வாங்க அவங்கவீட்ல ,
பெரிய குடும்பம் அக்காக்களால் நிறைந்த வீடு , ரொம்ப திக் ஆகிவிட்டோம்
செஸ் சொல்லித்தர ரொம்ப ட்ரை பன்னினான் -நானும்
காயெல்லாம் அடுக்கிடுவேன்கிற அளவு கற்றுக்கொண்டேன்
அதற்கும் மேல் அவனுக்கும் பொறுமையில்லை-எனக்கும்தான்
ரொம்ப வருஷம் கத்துக்கொண்டேன் காலேஜ் முடிக்கும் வரைனா பார்த்துக்கோங்க
தேர்வு எழுதியதுடன் அவன் படிப்பை முடித்து
நகை செய்ய போவதாய் சொன்னான் - தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தோம்
ஒரு நாள் ஏய் ஒருபோர்டு வர்றியா ? கேட்டான் - சரி னேன்
ஆட்டம் அவன் வசமே இருந்தது - கொஞ்ச நேரத்தில் -எனக்கு தெறியாமல் அவனை செக் மேட் செய்தேன் - ரொம்ப குஷி எனக்கல்ல -அவனுக்கு !!!
பார்த்தியா அவளவுதான் செஸ் ....
நாளைக்கு அண்ணனோட விளையாடலாம் னான்
அவங்க அண்ணன் -MBBS முடித்து மேற்படிப்பு அண்ணாமலையில் சேர்ந்திருந்தார்
எப்போதும் செஸ் புக்- போர்டுமாவே இருப்பார் - எனக்கு கொஞ்சம் அலர்ஜியாக்கூட இருக்கும்
ரெண்டோ அல்லது மூன்றாவது மூவிலோ
ராணியையும் பறிகொடுத்து ராஜ்யத்தையும் இழந்தேன் .
மாரியம்மன் கோவில் திருவிழாவில் சுற்றிவிட்டு காலையில் வீடு வந்தேன்
மதியம் 3 மணி இருக்கும் - சுப்பிரமணி வந்தான் -
வாடா போகலாம் பெரியசாமிக்கு முடியலையாம் -போனோம்
ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள் - மாமரத்திலிருந்து விழுந்துவிட்டானாம்
முன்னுக்கு பின்னாய் பேசினான் -சாகுல் சார பாக்கணும் நான் PMS க்கு
ரெக்கார்ட் கொடுக்கணும்னான் - ஏதேதோ -
ராத்தரி ஒரு மணிக்கு -தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் கொண்டுபோனார்கள்
மதியம் நானும் அப்பாவும் கிளம்பினோம்
செய்திவந்தது - நண்பர்கள் வந்தார்கள்
22 வயது, கனவுகளோடு, புதைந்து போனான்
பரீட்சை ரிசல்ட் வந்தது முதல் வகுப்பில் தேறியிருந்தான்
இப்போது நான் செஸ் நன்றாக விளையாடுவதற்கு
அவனின் பொறுமையே காரணம்
வாழ்க்கை ஆச்ரயங்களோடே நகர்கிறது
தினம் முளைக்கும் சூரியனை எங்கோ யாரோ
ஒரு நாள் பார்க்கப்போவதில்லை .....!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications