கண்ணில் விழுந்த காதல் மழையே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலககெங்கும் வீசும் காதல் வாசம்.. உலகமே கொண்டாடும் காதலர் தினம்.. உள்ளந்தோறும் காதல் இருந்தால் தினந்தோறும் கொண்டாட்டம்தானே.. தனியாக அதற்கொரு தினம் எதற்கு.. கொண்டாட்டமும் எதற்கு.

தினந்தோறும் காதலைக் கொண்டாடுகிறது மனித குலம்.. ஏதாவது ஒரு வகையில். தந்தையிடம், தாயிடம், மனைவியிடம், பிள்ளையிடம், காதலியிடம், காதலரிடம்.. காதலுக்கு முடிவேடு.. உரு ஏது?.

Special poem on Love

கதைகள் பேசும்
கண்கள் அல்லவா

கடைக்கண் சிவப்பது
பெண்ணின் அழகோ.

பெண்ணின் அழகே
கண்கள் அல்லவா

கண்ணில் தெரிவது
காதல் அழகோ

கண்ணுக்குள் வாழ்வது
காதல் அல்லவா

மௌனத்தில் மொழிந்தேன்
கண்கள் வழியாக

உனக்குள் உயிர்த்தேன்
உந்தன் காதலால்

மாய்ந்தும் வெல்வது
காதல் அல்லவா

எதை நான் சொல்ல
எந்தன் உயிரே

கண்ணில் விழுந்த
காதல் மழையே

ஆயிரம் எதிரிகளை
வீழ்த்தியவனும் வீழ்ந்து விடுகிறான் உன் விழிகளால்
ஏனோ தெரியவில்லை
என் மனம் மட்டும் சிக்கி கொள்கிறது

என் மனம் உன்னிடத்தில்
சிக்கிய பொழுதிலும்
உன் கண் இமைகள்
சிமிட்டும் சிமிட்டில் ஏனோ
நானே சிறகடித்து பறக்கிறேன்

என் காதலை ஏற்க உன்
நாணம் தயங்கும் தருணத்திலும்
உன் விழிகளில் என் தேடலை
உணர்ந்தேன் ஏதோ
என் மனமோ நெகிழ்ச்சியில்
என்னை ஆழ்த்தி விட்டது

இதை விட நான் மகிழும் தருணம்
வேறெதுவும் உண்டோ
காதலே நீ காதலை பரிசளித்தாய்
இதற்கு நான் எதை தருவேன்
என் கண் மூடினாலும்
உன் கண்ணில் நான் வாழ்வேன்.

காதல் வாழும் வரை காதலர்களும் வாழ்வார்கள்.. காதலர்கள் தோற்கலாம்.. ஆனால் காதல் என்றுமே தோற்பதில்லை.. காலம் காதலை வாழ வைத்துக் கொண்டேதான் இருக்கும்.. சூரியனும், சந்திரனும் போல.. அஸ்தமிக்காமல்.

- கலை

வாலெண்டின் மீம்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+