வீழ்ச்சிகளை வீழ்த்திடுவாய்.. எழுச்சியுடன் எழுந்து வா!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிதாய் பூத்திருக்கும் புத்தாண்டில்
புத்துனர்ச்சியாக பூத்திருப்போம்
புதிய வருடத்தில் புது வருகைகள்
புதிதாய் மலரட்டும்
சித்தரிக்கும் சித்திரையும்
சிரிப்புடன் அவதரிப்போம்
சிறப்பான வாழ்வும் உன்
பொன் சிரிப்பில் புதைந்திருக்கும்

உன் மூச்சில் உன் முயற்சிகள்
முழுமையாகட்டும்
புகழ்ச்சியுடன் நிமிர்ந்து நிற்பாய்
உன் தலை கவசமும்
கர்வம் கொள்வாய்
விழிப்புடன் இருந்திடுவாய்
வீழ்ச்சிகளை வீழ்த்திடுவாய்
எழுச்சியுடன் எழுந்து வா
எதிர்காலம் உன் வசப்படும்
நம் தமிழ் திருநாட்டில்
நாம் தமிழர் என்பதை பெருமிதத்தோடு
உரத்துச் சொல்வோம்
தன்னிலை மாறாத தமிழ்
தமிழனையும் தன்னிலை மாறாமல் தலை நிமிர வைத்தது.
தமிழனின் பெருமை தமிழ்.
தாய் திருநாட்டின் தமிழர் திருநாள்
தமிழனின் திருநாளாக அமையட்டும்
இனிய தமிழர் புத்தாண்டு தின வாழ்த்துகள்
- கலை












Click it and Unblock the Notifications