தண்ணீர் நம் உயிர் நீர்!
நம் உயிர் காக்க தண்ணீர் அவசியம்।
தாகம் போக்க, உணவு சமைக்க,
உடலையும் உடமையையும் தூய்மையாக்க
தண்ணீர் நம் உயிரை போல அவசியம்
ஆனால்
நாம் இந்த தண்ணீரை எத்தனை தேவையற்ற முறைகளில் செலவு செய்து வீணாக்கி கொண்டிருக்கிறோம்
நம் வீடு கட்ட தண்ணீர் தேவை
உடை செய்ய தண்ணீர் தேவை

நம் துணிமணி, மூக்கு கண்ணாடி, மருந்து,
ஆஸ்பத்திரியின் அனைத்து உபகரணங்கள்
நாம் உட்காரும் நாற்காலி, மேசை, பேனா, பென்சில்,
பாத்திரம், பேப்பர், சோபா, ஸ்கூட்டர், பைக், கார்
விமானம், கப்பல், துப்பாக்கி
அதனுள் இருக்கும் உதிரி பாகங்கள்,
என்று
நாம் காது குடையும் குச்சி வரை
பூமியில் இருக்கும் நாம் உபயோகிக்கும்
சகலமான
அனைத்து சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்
தண்ணீர் இல்லாமல் இயங்காது।
ஒரு ஜீன்ஸ் பாண்ட் தயாரிக்க 20000 லிட்டர் தண்ணீர்,
ஒரு குளிர்பானம் தயாரிக்க 2500 லிட்டர் தண்ணீர்
என்று அனைத்து பொருட்கள் தயாரிக்க
தேவைப்படும் தண்ணீர் செலவு பட்டியலை
உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளது।
ஆகவே ஐரோப்பிய நாடுகளும்
எல்லா பொருட்களின் மறுசுழற்சி முறையை
(recycling )
தீவிரப்படுத்தியுள்ளது।
மேசை, நாற்காலி, கார்கள், ஜீன்ஸ் உடைகள்,
மரச்சாமான்கள் என்று ஒருமுறை உபயோகப்படுத்தி
வேண்டாம் என்று மக்கள் குப்பையில் எறிந்த பொருட்களை
சேகரித்து அதனை தூய்மைப்படுத்தி,
தேவையான சீர்மை செய்து அழகுபடுத்தி,

புதிய பொருட்கள் போல் மாற்றி
மீண்டும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன।
வளர்ந்த நாடுகளிடம் இல்லாத செல்வமா, பணப்புழக்கமா?
அவர்கள் ஏன் புதுப்பிக்க பட்ட பழைய பொருட்களை
வாங்கி உபயோகிக்க வேண்டும்?
எல்லாம் தண்ணீர் என்னும் விலைமதிப்பில்லாத
உயிர் காக்கும் உயிர்நீரின் அவசியத்தை உணர்ந்துதான்!!!
எல்லா பொருட்களும் மீண்டும் மீண்டும் புதிதாக உற்பத்தி செய்ய ஆகும்
தண்ணீர் செலவினத்தை குறைத்து,
மனிதன் , பறவை, விலங்கு என பூமியில் வாழும்
அனைத்து உயிர்களுக்கும் உரிமை உள்ள தண்ணீரை
மனிதன் மட்டும், ஐந்தறிவு கொண்ட ஒரே காரணத்தால்,
மற்ற உயிர்களிடமிருந்து ஒரேயடியாய் அபகரித்து
தேவையற்ற பொருட்களின் உற்பத்தி செலவுக்காகும்
தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்।
ஆகவே, உபயோகமற்ற, தேவையற்ற பொருட்களை
நாம் வீட்டிலும் வாங்கி குவிக்காமல்,
ஒருமுறை உபயோகப்படுத்தி
கலர் பிடிக்கவில்லை, மாடல் பிடிக்கவில்லை
என்று
நீண்ட நாள் உபயோகிக்காத
எந்த ஒரு பொருளையும்
குப்பையில் எறிந்து விடாமல்,
அல்லது
வீட்டுக்குள்ளேயே பூதம் காத்த புதையல் போல
உபயோகிக்காமல்
வருடக்கணக்கில் போட்டு வைக்காமல்,
தேவைப்படும் வேறு யாருக்கேனும்
சிறிய பணம் பெற்று கொண்டோ
அல்லது இலவசமாகவோ கொடுத்து
அந்த பொருள் உற்பத்தி செய்ய உதவிய
தண்ணீருக்கு மதிப்பு அளிப்போம்।
-சுஜாதா பூபதிராஜ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications