வலிகள் வந்தாலும்.. வாழும் வழிகளை கற்றுக் கொடுத்தவள்.. அம்மா!
சென்னை: எத்தனை வலிகள் வந்தாலும் வலிகளை மறக்க வழிகளை கற்றுக் கொடுத்தவள் அம்மா. எத்தனை தோல்விகளில் துவண்டாலும் தோள் கொடுத்து தோழியாய் நின்றது அம்மா. தடைகள் என்னை தடுத்தாலும் வீர நடை போட கற்றுத் தந்தவர் அம்மா.
அம்மா என்றாலே பாசம்.. அம்மா என்றாலே அரவணைப்பு.. ஆம் என் அம்மா.. நம்பிக்கையின் ஊற்று. மதத்தைத் தாண்டிய காதலுக்கு என் அப்பாவுக்கு கிடைத்த பொக்கிஷம். எங்களுக்குக் கிடைத்த வரம், கலப்பு திருமணத்தின் தடைகளைக் கடந்து எங்களை வளர்த்தவர்.

என் அம்மா பீடி சுற்றும் தொழிலாளி. இரவு பகல் பாராமல் ஓயாது உழைப்பவர். நினைவில் உள்ளது அம்மா.. எங்கே தூங்கும் குழந்தைகள் எழுந்து விடக் கூடாதே என்று மண்ணெண்ணெய் விளக்கில் பீடி சுற்றி கொண்டிருப்பீர்கள். மறு நாள் எழுந்து வேலைகளை முடித்து எங்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு பீடி கட்டுக்களை சரி பார்த்து அடுக்கி வைத்து பீடிக் கடைக்கு கொண்டு செல்வார்.
கால் நோக நடந்தே செல்வார்.. நோக்கம் ஒன்றே பெரிது அவருக்கு வலியல்ல.. வழியை அவரே அமைத்து நேர்கொண்ட நடை போடுவார். எனக்கு பாரதி கண்ட புதுமைப் பெண். எதையும் எதிர்பார்க்காத மனது.. எதற்கும் ஆசைப்படாத மனது. இதுவரை எதையும் ஆசைப்பட்டு வாங்கியது இல்லை..
தேவைகளை களைந்த தேவதை. வருங்காலத்தில் கேள்விகளுக்கு பதில் தேடும் களமாக உழைப்பை நம்பினார்.
ஊருக்காக வாழாது தன் மனதுக்காகவும் தன்மானத்துக்காகவும் வாழ்பவர். அடிக்கடி எங்க அம்மா சொல்கின்ற ஒரே வார்த்தை "யாருக்கும் பயப்படக் கூடாது.. தப்பு பண்ண மட்டும்தான் பயப்படணும்.. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து வாழணும்.. நேர்மையா வாழணும்.."
வாழ்க்கையோட தத்துவத்தை எளிமையாக புரிய வைத்தவர்.. கண்டிப்பு பாசம் அரவணைப்பு அனைத்தும் ஒருங்கே பெற்றவர். உலகத்துல எல்லா அம்மாவுக்கும் குழந்தைகள்தான் உலகமே.. குழந்தை அழுதால் துடிப்பதும் அம்மாதான்.. கண்ணீரைத் துடைப்பதும் அம்மாதான்.
அம்மா எப்பவுமே கண்டிப்புதான்.. எப்பவுமே ஏதாவது திட்டிட்டே இருக்கிற மாதிரி தெரியும்.. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அம்மா சொல்றதுதான் சரின்னு தோணும்.
அம்மா என்றால் நம்பிக்கைதான்
அம்மா என்றால் அரவணைப்பு
அன்பின் உருவம்
அதிகாரத்தின் அடையாளம்
அன்பும், அதிகாரமும் ஒருங்கே பெற்றவளே
அனைவரின் தாய்.
அன்பைக் கொடுத்து, குடும்பத்தை காத்து வீட்டிலும் நாட்டிலும் ஆட்சி புரிபவளே அன்னை.
- ஏ. காயத்ரி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications