தொடரும் நீட் மரணங்கள்.. எரியப்போகின்றன நீதியற்ற அரசனின் நகரங்கள்!
-மனுஷ்ய புத்திரன்
மார்பில் அணிந்த துப்பட்டாவில் இருக்கலாம்
ரகசியக் குறிப்புகள்
தோளாடைகள் துகிலுரியப்பட்டு
தேர்வுமையங்களில் நுழைகிறார்கள்
நவீன பாஞ்சாலிகள்
அழியப்போகின்றன
அஸ்தினாபுரங்கள்

மூக்குத்தியில்
காதணியில்
ஹேர் பின்களில் இருக்கலாம் இருக்கலாம்
ரகசியக் குறிப்புகள்
அணிகலன்கள் களையப்பட்டு
தலைவிரி கோலமாய்
தேர்வு மையங்களில் நுழைகிறார்கள்
நவீன கண்ணகிகள்
எரியப்போகின்றன
நீதியற்ற அரசனின் நகரங்கள்
காலணியில் இருக்கலாம்
ரகசியக் குறிப்புகள்
வெறுங்கால்களுடன்
பதைக்கப் பதைக்க
தேர்வு மையங்களில் நுழைகிறார்கள்
அவமானத்தின் நெருப்பில் குளிக்கும்
நவீன சீதைகள்
செருப்புகளால் ஆளப்பட்ட ராஜ்ஜியம்
செருப்புகளால் வீழப்போகிறது
தண்ணீர் பாட்டில்களில்
வியர்வையை துடைக்கும் கைக்குட்டையில்
இருக்கலாம்
ரகசியக் குறிப்புகள்
வியர்வை வழியும் உடல்களுடன்
தவித்த நாவுகளுடன்
தேர்வு மையங்களில் நுழைகிறார்கள்
ஊழிப்பெருவெள்ளத்தால்
கொலைகாரனின் கோட்டைகள் நொறுங்கப்போகின்றன
தொலைதூர நகரமொன்றின் விடுதியில்
வயோதிக தகப்பனை விட்டு விட்டு
தேர்வு மையத்தில் நுழைகிறான் ஒருவன்
அவனது தகப்பன் விடுதியில்
நிராதரவாக இறக்கிறான்
அவனது சில்லிட்ட சடலம்
மகனுக்காக தேர்வுமுடியும்வரை
பொறுமையாக காத்திருக்கிறது
பிணங்களின் மீது உருவாக்கப்பட்ட அதிகாரம்
பிணங்களால் அழுகப்போகிறது
ஏன் அஞ்சுகிறீர்கள்
ரகசியக் குறிப்புகளைகண்டு?
உங்கள் அழிவைக் குறிக்கும்
நாளின் ரகசியக் குறிப்புகளை
எங்கள் ஆடைகளில்
ஒளித்து வைத்திருக்கவில்லை
எங்கள் அணிகலன்களில் ஒளித்துவைத்திருக்கவில்லை
எங்கள் காலணிகளில்
ஒளித்துவைத்திருக்கவில்லை
உங்கள் அழிவிற்காக ரகசியக்குறிப்புகளை
எங்கள் ரத்த நாளங்களில் ஒளித்து வைத்திருக்கிறோம்
எங்கள் மீது விழும் சவுக்கடிகளின்
ரணங்களில் ஒளித்துவைத்திருக்கிறோம்
தேடுங்கள்
ரகசியக் குறிப்புகளை
எங்கள் உள்ளாடைகளில் கையைவிட்டு தேடுங்கள்
உங்களுக்கான இறுதிக் குறிப்புகளை
இதயத்தின் ஆழத்தில் ஒளித்துவைத்திருக்கிறோம்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications