பதிவுகள் சிறுகதைப் போட்டி முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

"பதிவுகள் இணையதளம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த சாந்தினி வரதராஜன் முதல் பரிசுவென்றுள்ளார்.

இது குறித்து பதிவுகள் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர்களின் ஆதரவுடன் நந்தா பதிப்பகத்தின் பதிவுகள் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு உலகின் பலபாகங்களிலிருந்தும் கலந்து கொண்ட படைப்பாளிகள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள்.

போட்டிக் கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நடுவர்களாக இருக்க முடியுமா எனக் கேட்டபோது, எழுத்தாளர்களானதிரு. அ.முத்துலிங்கமும் திரு.என்.கே.மகாலிங்கமும் தயக்கமின்றி மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள்.

இவர்கள் இருவரைப் பற்றியும் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, உலகத் தமிழ் இலக்கிய உலகமும்நன்கு அறியும். பதிவுகள் நடத்தும் சிறுகதைப் போட்டி பற்றிக் குறிப்பிட்டதும், அதற்குரிய பரிசுப்பணத்திற்குப்பொறுப்பேற்ற நந்தா பதிப்பக அதிபர் திரு.நந்தகுமார் இராஜேந்திரம் அவர்களுக்கு நன்றிகள்.

போட்டிக் கதைகளை தேர்ந்தெடுக்க நாங்கள் பின்வரும் முறைகளைக் கையாண்டோம். எழுத்தாளர்களின்பெயர்களை நீக்கிவிட்டு கதைகளை மட்டுமே கொடுத்தோம். எழுத்தாளர்களின் பெயர்கள் எந்தவிதத்திலும்கதைகளைத் தேர்வு செய்வதில் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இவ்வாறு செய்தோம்.

அதற்கு நடுவர்களும் முழுவதுமாக ஒத்துழைத்தார்கள். அதற்கும் எங்களது நன்றிகள்.

போட்டிக்கு வந்த கதைகளை தேர்வு செய்வதில் நடுவர்கள் திணறிப் போனார்கள் என்பது தான் உண்மை.போட்டிக்கு வந்த கதைகள் அனைத்தும் மிகவும் தரமாக இருந்தது தான் இதற்குக் காரணம்.

முதல் பரிசு:

"எல்லாம் இழந்த பின்னும்..! என்ற சிறுகதை முதல் பரிசை வென்றது. இதை எழுதிய சாந்தினி வரதராஜனுக்கு 200கனடியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

இவரது மின்னஞ்சல் முகவரி: ([email protected])

இரண்டாவது பரிசு:

இரண்டாவது பரிசு, "நான், நீங்கள் மற்றும் சதாம் என்ற சிறுகதையை எழுதிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதவன் தீட்சண்யாவுக்கு கிடைத்துள்ளது. இவருக்கு100 கனடியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

இவரது மின்னஞ்சல் முகவரி: ([email protected])

மூன்றாவது பரிசு:

அமெரிக்காவைச் சேர்ந்த அலர்மேல் மங்கை எழுதிய, "தீதும் நன்றும் என்ற சிறுகதைக்கு 3ம் பரிசு கிடைத்துள்ளது. இவருக்கு 75 கனடியன் டாலர்கள்பரிசு வழங்கப்படுகிறது.

இவரது மின்னஞ்சல் முகவரி: ([email protected])

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, போட்டியினையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவிய அனைத்துபடைப்பாளிகளுக்கும், நடுவர்கள் மற்றும் பரிசுப் பணம் வழங்கிய நந்தா பதிப்பக உரிமையாளர் திரு. நந்தகுமார்இராஜேந்திரம் அவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்களது நன்றிகள் உரித்தாகுக.

படைப்பாளிகளுக்கு பரிசுப்பணமும், சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+