136 நாடுகளிலிருந்து 63 மொழிகள் பேசும் 1,000 அறிஞர்கள் பங்கேற்புடன் 11-வது உலகத் தமிழ் மாநாடு!
சென்னை: 136 நாடுகளிலிருந்து 63 மொழிகள் பேசும் 1,000 அறிஞர் பெருமக்கள் பங்கேற்புடன் 11-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளதாக இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான மூத்த வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதினோராம் உலகத்தமிழ் மாநாடு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தலைப்புகள் என்ற பதிவில் எழுதியுள்ளதாவது:

கலைப்புலம்:
சிற்பத்துறை
1. தமிழ்ப் படிமக்கலை (6 சமயங்கள் - சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் சாக்தம்)
2. அலங்காரக்கலை மற்றும் அழகியல்
3. கலை வரலாற்றியல்
5. வரைபடம் மற்றும் வரைகலை
6. நாட்டுப்புற மற்றும் சிறு தெய்தவங்கள்
7. இயற்கை வழிபாடுகள்
இசைத்துறை
1. தமிழிசை (தமிழ்ப்பண் ஆய்வு)
2. தமிழிசைக் கருவிகள்
3. பாரம்பரிய நடனம்
நாடகம்
1. கூத்துகலை (பொம்மலாட்டம்)
2. புராண நாடகங்கள்
3. நவீன நாடகங்கள்
4. அரங்கக் கலை
5. ஒப்பனைக் கலை
6. கிராமிய நடனங்கள் (தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம்)
#சுவடிப்புலம்:
••••
ஓலைச்சுவடித் துறை
1. சுவடிகளின் பாதுகாப்பு நெறிகள்
2. சுவடிகளின் பழமை
3. சுவடிகளைத் திரட்டுதல்
4. சுவடிகளைப் பதிப்பித்தல்
5. எண் சுவடிகள்
7. சோதிடச் சுவடிகள்
8. மின்னணுப்படி எடுத்தல்
அரிய கையெழுத்துச் சுவடித்துறை
1. அரியகையெழுத்துச் சுவடிகளின் பழமை
2. அரியவகையெழுத்துச் சுவடிகளின் பாதுகாப்பு நெறிகள்
3. அரியவகையெழுத்துச் சுவடிகளை பதிப்பித்தல்
4. அரியகையெழுத்துச சுவடிகளைத் திரட்டுதல்
5. பதிப்பாசிரியர்கள்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை
1. தமிழகக் கல்வெட்டுகள்
2. கல்வெட்டுகளைப் படியெடுத்தல்
3. தொல்லியல் அகழாய்வுகள்
4. தொல்லியல் சின்னங்களைப் பாதுகாத்தல்
5. தொல்லியல் அருங்காட்சியகம்
6. சுற்றுலாவியல்
7. தமிழ்த் தொல்லியல்சார் அறிவியல்
8. தமிழகத் தொல்லியலாளர்கள்
கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை
1. நீரடித் தொல்லியல்
2. தமிழகத் துறைமுகங்கள்
3. கடலூர் அமிழ்ந்த நிலத்தோற்றங்கள்
4. கப்பல் கட்டுமானங்கள்
5. மரபுவழி முத்து, சங்குக் குளித்தல்
6. கடல்சார் மரபுச் சின்ன மேலாண்மை
#வளர்தமிழ்ப்புலம்:
****
அயல்நாட்டுத் தமிழகக் கல்வித்துறை
1. தமிழரின் அயல்நாட்டு வாணிகம்
2. அயல்நாட்டுத் தமிழர்கள்
3. அயல்நாடுகளில் தமிழரின் விழுமியங்கள்
4. அயல்நாடுகளில் தமிழரின் கலை
6. அயலகத்தில் தமிழ் பரவலாக்கமும் விரிவாக்கமும்
7. அயலகத் தமிழ்ப்பணிகள் பதிவாக்கம்
மொழிப் பெயர்ப்புத்துறை
1. மொழி பெயர்ப்பு இலக்கியங்கள்
2. மொழி பெயர்ப்புக் கோட்பாடுகள்
3. மொழி பெயர்ப்புச் சிக்கல்கள்
4. மொழியியல் பிரச்சனைகள்
5. மொழி பெயர்ப்பு நுணுக்கங்கள்
அகராதியியல் துறை
1. கலைக்களஞ்சியம்
2. அகரமுதலி திட்டம்
3. சொற் றொகுதிகள்
4. சொல்லடைவுகள்
5. நிகண்டுகள்
6. அகராதி வரலாறு
7. இருமொழி, பன்மொழி அகராதிகள்
8. தமிழ் சொற்பொருள் அகராதி
சமூக அறிவியல் துறை
1. மானுடவியல்
2. ஊரக மற்றும் நகர்ப்புறச் சமூகம், பொருளாதாரப் பிரச்சனைகள்
3. சமூக மொழியியல் ஆய்வுகள்
4. பெண்ணின் உரிமைகள்
5. உளவியல்
6. மனிதநேயக் கல்வி
7. குடிமையியல்
8. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்
அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை
1. தமிழர் தகவல் தொடர்பு தொழில் நுட்பம்
2. தமிழர் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்
3. தமிழர் கணினியியல்
4. தமிழர் மருத்துவம்
5. தமிழர் சட்டம்
6. தமிழர் பொறியியல்
7. தமிழர் அறிவியல் கலைச் சொற்கள்
8. விண்ணியல் பொறியியல்
கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை
1. தமிழர் பழைய கல்விமுறை
2. கல்வி வளர்ச்சி
3. இன்றைய கல்விமுறை
4. புதிய கற்பித்தல் முறை
5. பெண்கல்வி வரலாறு
6. கல்வியியல் சிந்தனைகள்
#மொழிப்புலம்:
****
இலக்கியத்துறை
1. சங்க இலக்கியங்கள்
2. இடைக்கால இலக்கியங்கள்
3. நவீன இலக்கியங்கள் (கதை, கவிதை, நாவல், கட்டுரைகள்)
4. இலக்கியப் பொருட்களஞ்சியங்கள்
5. இலக்கியக் கோட்பாடுகள்
6. தமிழ் இலக்கணம்
7. இலக்கியமும் வாழ்க்கையும்
8. புலம்பெயர் இலக்கியம்
9. குழந்தை இலக்கியம்
9. நாட்டுப்புற இலக்கியம்
மொழியியல் துறை
1. குறியீடுகள்
2. ஒலிப்பியல்
3. சமூக மொழியியல்
4. பயன்பாட்டு மொழியியல்
5. மொழி உரிமைகள்
6. மொழிப் பெயர்ப்பியல்
7. கலைக்களங்சியங்கள்
8. தமிழ் மொழியின் விரிதரவு உருவாக்கம்
9. வட்டாரச் சமூகக் கிளைமொழி வழக்குகள்
10. இரு மொழியியம் மற்றும் பன்மொழியியம் உள மொழியியல்
இயக்கங்கள் வளர்த்தத் தமிழ்
1. தேசியம்
2. திராவிட
3. பொதுவுடைமை
மெய்யியல் துறை
1. தமிழ்ச் சமய தத்துவங்கள்
2. பௌத்த சமய தத்துவங்கள்
3. சமண சமய தத்துவங்கள்
4. கிறித்துவ சமய தத்துவங்கள்
5. இசுலாமிய சமய தத்துவங்கள்
6. சித்தர் மரபுத் தத்துவங்கள்
7. நவீனகால மெய்யியல்
8. சமகால மெய்யியல்
9. கோயில் கலை
10. கோயில் மேலாண்மை
பழங்குடி மக்கள் ஆய்வு மையம்
1. பழங்குடிமக்களின் பண்பாடு
2. ஆடை மற்றும் ஆபரணங்கள்
3. பழங்குடி மக்கள் அருங்காட்சியகம்
4. நாட்டுப்புற இலக்கியங்கள்
5. பழங்குடி மக்களின் மருத்துவ (மூலிகைகள்) அறிவு
6. இனவியல் மருத்துவவியல்
7. மருத்துவ மானிடவியல்
6. விலங்கின மருந்தியல்
ஒப்பிலக்கியம் பள்ளி துறை
1. தமிழில் ஒப்பிலக்கியம்
2. ஒப்பிலக்கியம் வரலாறு
3. இலக்கியத் திறனாய்வுகள்
4. மேலைநாட்டு ஒப்பிலக்கியங்கள்
5. இலக்கியக் கொள்கை - கோட்பாட்டுருவாக்கம்
6. மொழிப் பெயர்ப்பாளர்கள்
7. நேர்காணல்கள்
நாட்டுப்புறவியல் துறை
1. அழிந்து வரும் மொழிகள்
2. நாட்டுப்புறப் பாடல்கள்
3. நாட்டுப்புற நடனங்கள்
4. நாட்டுப்புற வழக்காறுகள்
#அறிவியல்புலம்:
••••
சித்த மருத்துவத்துறை
1. தமிழ் மருத்துவ முறை
2. சித்தர்களின் வரலாறு
3. சித்த மருத்துவ முறை
4. சித்த மருத்துவ சுவடிகள் மற்றும் நூல்கள்
5. அகத்தியர் இரண வைத்தியமுறை
6. சித்த மருந்தியல்
7. மூலிகைப் பண்ணைப் பராமரித்தல்
8. திசு வளர்ப்பு முறை
9 மூலிகைப் பூங்கா
தொல்லறிவியல் துறை
1. தொல் படிமங்கள்
2. பழந்தமிழர் அறிவியல் மற்றும் தொழிற் நுட்பம்
3. பழங்கால மற்றும் இக்கால தொழிற் நுட்பம் ஒப்பீடு
4. தமிழக விலங்கினங்கள்
5. தமிழகத் தாவரங்கள்
6. தமிழகப் பறவைகள்
7. வானியல் காலப்பதிவுகள்
தொழில் மற்றும் நில அறிவியல் துறை
1. நில அறிவியல்
2. மண்ணியியல்
3. கடலியல்
4. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
5. இயற்கை வனப்பாதுகாப்பு
6. தொலை உணர்வு
7. மரபுவழி அறிவியல்
கட்டடக் கலைத்துறை
1. தமிழக குடைவரைக் கோயில்கள்
2. தமிழக கட்டுமானக் கோயில்கள்
3. தமிழக கட்டடக் கலைக்கும் பிறநில கலைகளுக்கும் உள்ள தொடர்பாடல்கள்
4. பண்டைய நுண்கலைப் படைப்புகளில் அறிவியல் கூறுகளும் பொறியியல் நுட்பங்களும்
5. கிராமிய கட்டுமானங்கள்
6. தமிழக ஓவியங்கள்
7. தமிழக சிற்பக்கலைகள்
8. தமிழக மண்பாண்டங்கள்
கணிப்பொறி அறிவியல் துறை
1. கணிப்பொறி வழி மொழியாய்வுகள்
2. கணிப்பொறி தொழிற்நுட்பம்
3. தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்புகள்
4. தமிழக மகளிர் மேம்பாட்டு அமைப்புகள்
5. தலித்தியம்
6. பெண்ணியம்
சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் துறை
1. சுற்றுச்சூழல் மாசு
2. இயற்கை வளங்கள்
3. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் மேலாண்மை
4. பேரழிவு மேலாண்மை
#நூலகம்:
****
1. நூலகங்களின் பொது அமைப்புகள்
2. மின்னூல் சேமிப்பரங்கம்
3. நூலகத் தொழிற்முறை
4. நூலகங்களும் ஊடகங்களும்
5. நவீன நூலகங்கள்
6. நூலகங்களின் பாதுகாப்பு
7. வாசிப்பரங்க மேம்பாடுகள்
#இயல்கள்:
••••
1. தமிழ் வணிகவியல்
2. வேளாண்மையியல்
3. சமூகவியல்
4. குற்றவியல்
5. கணிணியியல்
6. இதழியல்
7. தடய அறிவியல்
8. வேதியியல்
9. இயந்திரப் பொறியியல்
10. உற்பத்தி பொறியியல்
11. மின் / மின்னணு பொறியியல்
12. தகவல் தொடர்புப் பொறியியல்
13. புள்ளியியல்
14 சமூக-ஊடகவியல் / சமூக ஊடகங்கள்.
சிறப்பு_அம்சங்கள்:
1.136நாடுகளிலிருந்து 63 மொழிகள் பேசும் ஆயிரம் அறிஞர் பெருமக்கள், தமிழறிஞர்கள், பிற மொழி அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் அழைக்கப்பட உள்ளார்கள்.
2. தமிழகம் தவிர, பிற இந்திய மாநில மற்றும் பிற நாடுகளில் உள்ள ஆயிரம் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அழைக்கப்பட உள்ளார்கள்.
3. தமிழின் சிறந்த 200 படைப்புகள் நாடகமாக அரங்கேற்றப்படும்
4. தமிழின் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படும்
5. பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி நடத்தப்படும்
6. பல்கலைக்கழக, கல்லூரி, ஆசிரியர்களுக்குக் கட்டுரைப் போட்டி நடத்தப்படும்
7.இந்தியாவில் வெளிவந்த சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, கதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு நூலுக்கு எனத் தனித்தனியாகப் பரிசுகள் வழங்கப்படும்
8. இந்தியா தவிர்த்துப் புலம்பெயர்ந்தவர்களின் சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பு, கட்டுரைகள் தொகுப்பு, கதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு நூலுக்கு எனத் தனித்தனியாகப் பரிசுகள் வழங்கப்படும்
9. திருநங்கைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி அமர்வு அமைக்கப்படும்
10. சிறந்த தமிழ்ச் சாதனையாளர்களுக்கு 200 விருது வழங்கப்படும்
11. தமிழர் உணவு, மருத்துவம், கலை, கைத்திறன் மற்றும் நெசவு வணிகம் போன்றவற்றிற்குத் தனி அரங்குகள் அமைக்கப்படும்
12. தமிழ்ப் பத்திரிக்கை, காட்சி ஊடகம், சமூக ஊடகங்களுக்குத் தனி அரங்குகள் அமைக்கப்படும்
13. தமிழகம், பிற மாநிலங்கள், அயலகக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்
14. தமிழில் வெளிவந்த சிறந்த கவிதைகள், கட்டுரைகள், கதைகள் 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்
15. தமிழரின் தொழில், பிற மாநிலத் தொழில், பிற நாட்டின் தொழில்கள் பற்றிய கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்
16. தமிழ்த் திரைப்படம், குறும்படம் போன்றவற்றுக்குத் தனி அரங்கு அமைக்கப்படும்
17. வாழ்ந்த- வாழும் 1000 தமிழ்ச் சாதனையாளர்களின் உருவ அணிவகுப்பு நடைபெறும்
18. இலக்கியங்களில் உள்ள கதாபாத்திரங்களின் அணிவகுப்பு நடைபெறும்
19. பாரம்பரிய, நவீன ஓவியக் கண்காட்சி அமைக்கப்படும்
20. இந்த மாநாட்டின் நினைவாகத் தமிழகத்தில் ஒரு மாவட்டம் முழுவதும் பழ மரக்கன்றுகள் நடப்படும்
21. இந்த மாநாட்டின் நினைவாக ஆறு, குளங்களைத் தூர்வார ஓர் இயந்திரம் (JCB) வழங்கப்படும்.
இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications