மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Adobe! டெல்லி ஏஐ மாநாட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!
டெல்லி: போட்டோஷாப் உள்ளிட்ட செயலிகளுக்கு மிகவும் பெயர் பெற்ற நிறுவனம்தான் Adobe. இந்த நிறுவனத்தின் செயலிகளை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்தியாவில் மாணவர்களுக்கு இந்த செயலிகளை இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்க இருப்பதாக Adobe நிறுவனம் அறிவித்திருக்கிறது.
டெல்லியில் 'இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026' எனும் தலைப்பில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் இந்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்திய மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

யார் யார் பயன் பெறுவார்கள்?
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்படும். இதன் மூலம் ஃபயர்ஃபிளை (Firefly), ஃபோட்டோஷாப் (Photoshop), அக்ரோபட் (Acrobat) போன்ற அதன் முக்கிய மென்பொருட்கள் இனி இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
இது குறித்து அடோப்பின் தலைமை நிர்வாகி சாந்தனு நாராயண் கூறுகையில், "இந்தியாவில் கோடிக்கணக்கான மாணவர்களுக்கான படைப்பாற்றல் வாய்ப்புகளை அடோப் விரிவுபடுத்துகிறது. அவர்களுக்கு AI திறன்களை வழங்கி, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கிறது. அடோபின் முன்னணி கருவிகளைக் கொண்டு இந்திய மாணவர்கள் 'விக்சித் பாரத்' கனவை விரைவுபடுத்துவார்கள்" என்று கூறியிருக்கிறார்.
இந்த அறிவிப்பின் மூலம், இந்திய அரசின் 'இந்தியாவில் உருவாக்குவோம்' பார்வையை வலுப்படுத்த முடியும் என்றும், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் துறைகளில் 2030க்குள் 2 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 2026 மத்திய பட்ஜெட் இலக்கையும் இது பூர்த்தி செய்யும் என நிறுவனம் நம்புகிறது.
இலவச சேவைகள் மட்டுமல்லாது, இந்திய அரசுடன் இணைந்து, 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அமைக்கப்படும் கன்டென்ட் உருவாக்கும் ஆய்வகங்களுக்கு AI சார்ந்த சேவைகளையும், அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களையும் அடோப் இலவசமாக வழங்குகிறது.
அடோப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்திய மாணவர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது வரை போட்டோ ஷாப் போன்ற செயலிகளை பன்படுத்த வேண்டும் எனில், அதற்கு கண்டனம் செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பின் மூலம் இனி மாணவர்கள் இதை இலவசமாக பயன்படுத்துவார்கள்.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications