AI எல்லாம் வேலைக்கே ஆகாது.. எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா.. வெளியான மிக முக்கிய ஆய்வு
சென்னை: இந்தக் காலகட்டத்தில் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. அதேநேரம் முழுமையாக ஏஐ டூல்களை நம்பி ஒரு வேலையைத் தரும் அளவுக்கு அவை வளரவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது குறித்து மிக முக்கியமான ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ஏஐ டூல்கள் இன்னும் போதியளவு முதிர்ச்சியடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலத்தில் ஏஐ டூல்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளன. இது நமக்குப் பல்வேறு வழிகளில் பலனைக் கொடுக்கிறது. இருந்த போதிலும் இதில் ஏகப்பட்ட சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. இதற்கிடையே ஏஐ தொடர்பாகச் சில முக்கியமான ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.

ஏஐ ஏஜெண்டுகள்
அதில் சுயமாகச் செயல்படும் ஏஐ ஏஜெண்டுகள் வேகமாக வளர்ந்தாலும், அவை இன்னும் முதிர்ச்சியடையவில்லை எனப் புதிய ஆய்வு காட்டுகிறது. அதாவது இந்த ஏஐ ஏஜெண்டுகளால் பல வேலைகளை சுயமாகச் செய்ய முடிவதில்லை. அந்தளவுக்கு அவை இன்னும் தேவையான வளர்ச்சியை அடையவில்லை என அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
"Agentic AI Frameworks Under The Microscope" எனும் இந்த ஆய்வுக் கட்டுரையை ஹைதராபாத் ஐஐடி ஆய்வாளரும் மற்றும் தென் டென்மார்க் பல்கலைக்கழகத்தின் மென்பொருள் கட்டமைப்புத் தலைவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். அதில் தான் பெரும்பாலான AI ஏஜெண்ட் கட்டமைப்புகள் முதிர்ச்சியற்றவை என்றும் குறைவான நினைவுத்திறன், அடிப்படை திட்டமிடல் இல்லாதது ஆகியவை பெரிய பிரச்சினையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் பாயிண்டு
இப்போது AI கட்டமைப்புகளில் இருக்கும் ஒரே பிளஸ் பாயிண்டு அதன் modularity மட்டும் தான். அதாவது வெளியில் இருந்து டேட்டா பேஸ், API-கள் (Application Programming Interfaces), சாப்ட்வேர்களை இணைத்து இதில் வேலை செய்ய முடிகிறது. இதன் மூலம் ஏஜ ஏஜண்டுகளை ரியல் டைம் சிஸ்டம்களுடன் ஒருங்கிணைப்பது செயல்படுத்த முடிகிறது.
சிக்கல்கள்
அதேநேரம் ஏஐ ஏஜெண்டுகளின் நினைவுத்திறனே ஒரு முக்கிய குறைபாடாக உள்ளது.. ஏனென்றால் பல ஏஐ தளங்கள் 'வெக்டர் ஸ்டோரேஜ்' (vector storage) என்ற நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இது தகவல்களை நம்பர்களை மாற்றி சேமித்துக் கொள்ளவும். இது உரையாடல்களை ஏஜெண்டுகள் நினைவில் வைத்திருக்க உதவினாலும், குறுகிய காலம் மட்டும் அவை நினைவில் இருக்கிறது. இதனால் நீண்ட திட்டங்களுக்கு இது ஏற்றத்தக்கதாக இருப்பதில்லை. பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும் பிராஜக்ட்களில் சிக்கல்கள் உருவாகின்றன.
அதேபோல ஏஐ ஏஜெண்டுகளில் திட்டமிடுதலும் ஒரு பலவீனமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய AI ஏஜெண்டுகள் ஒரு சிக்கலான புரோகிராமை கொடுத்தால் சரியான விடை கிடைக்கும் வரை trial-and-error முறையில் திரும்பத் திரும்ப வேலை செய்கிறது. ஆனால் விதிகள், லாஜிக்கை புரிந்து திட்டமிட்டு வேலை செய்வதில்லை. அதாவது எடுத்தோம் கவிழ்த்தோம் என வேலை செய்கிறதாம். திட்டமிட்டு வேலை செய்யும் போக்கு இல்லையாம்.
முக்கிய பிரச்சனை
மேலும், மற்றொரு முக்கிய சிக்கலாகக் கவனிக்கும் திறனைச் சொல்கிறார்கள். ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்லும்போது எதற்காக இதைச் செய்யச் சொல்கிறார்கள்.. இதன் பின்னணி குறித்து அவை கவனிப்பதே இல்லை. சில கட்டமைப்புகள் ஓரளவுக்குக் கண்காணித்தாலும் பெரும்பாலான ஏஐ ஏஜெண்டுகள் இங்கும் கோட்டை விடுவதாக அந்த ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications