ஆகாயத்தில் பறக்கும் அரிசி விலை.. விஜய் காதுக்கு இந்த விஷயம் எட்டவில்லையோ! கொந்தளிக்கும் பெ.சண்முகம்
சென்னை: அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூ.1800 ஆக இருந்தததாகவும், இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? என்றும் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அரிசி, காய்கறிகள், எண்ணெய், மளிகை சாமான்களின் விலை சுமார் 35% வரை உயர்ந்திருக்கிறது. மே மாதத்தில் 25 கிலோ அரிசி மூடையின் விலை ரூ.1,400ஆக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் ரூ.1,700ஆக உயர்ந்தது.

அது தற்போது ரூ.2,000க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. தினமும் சாப்பிடும் அரிசி விலை பட்ஜெட்டில் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து இருப்பது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் சர்க்கரை விலை ரூ.80ஐ தொட்டுவிட்டது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த முடியாததால், அதனை ரேஷன் கடையில் விற்க தொடங்கினர்.
ஆனால் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்தில் ஒரு கிலோ மட்டுமே வெங்காயம் போதுமா என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில் அரிசி விலை உயர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பெ.சண்முகம், அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.
25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூபாய் 1800 ஆக இருந்தது. இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்பது மட்டும் உறுதி. ஆனால் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லை போலும் என்று விமர்சித்துள்ளார்.
எல் நினோ பாதிப்பு காரணமாக நெல் உற்பத்தி பல்வேறு மாநிலங்களிலும் குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் டிசம்பர் மாதத்தில் அரிசி விலை மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான பொருட்களின் விலை உயரும் என்று கணிக்கப்படுகிறது. அதற்குள் சூழலை புரிந்து முதல்வர் விஜய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
