ஏஐ-யால் மொத்த வேலையும் பறிபோகுமா? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? டாப் டெக் சிஇஓக்கள் சொல்றதை பாருங்க
சென்னை: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பல்வேறு துறைகளிலும் ஆட்டி படைக்க தொடங்கியுள்ள நிலையில், வரும் காலங்களில் ஏஐ- வேலைவாய்ப்புகளில் ஏற்படுத்த போகும் தாக்கம் என்ன? வேலை வாய்ப்புகள் முற்றிலும் பறிபோகுமா என்பது குறித்து உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் சிஇஓக்கள் சொன்ன முக்கியமான தகவல்களை பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பல நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக, எளிதான வேலைகளுக்கும், ஆரம்ப நிலை வேலைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் மத்தியில் இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வேலைகள் இல்லாமல் போகலாம்
செயற்கை நுண்ணறிவால் வேலை வாய்ப்புகள் பறிபோகும், ஊழியர்களின் ஊதியம் குறையும் என்ற பரவலான அச்சம் நிலவும் நிலையில், நிவிடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு காலத்தில் வேலைகள் நிச்சயமாக மாறும் என்றும், அதே சமயம் ஆரம்ப நிலை வேலைகள் முற்றிலுமாக இல்லாமல் போகாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ள நிவிடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூவாங், பாரிஸில் நடந்த VivaTech மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "சில வேலைகள் இல்லாமல் போகலாம், ஆனால் நிறைய வேலைகள் உருவாக்கப்படும். நிறுவனங்கள் அதிக உற்பத்தித் திறன் பெறும்போதெல்லாம், அவர்கள் அதிக பணியாளர்களை நியமிக்கிறார்கள்" என்று கூறினார்.
வேலையின்மை 20% ஆக உயரும்
முன்னதாக ஆந்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ ஏமோடீ கூறுகையில், "
செயற்கை நுண்ணறிவால் ஆரம்ப நிலை ஒயிட் காலர் வேலைகள் (white-collar jobs) 50% வரை இல்லாமல் போகலாம் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை 20% ஆக உயரக்கூடும் என்றும் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜென்சன் ஹுவாங் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஹூவாங் மேலும் கூறுகையில், ஒரு விஷயம் என்னவென்றால் ஏஐ மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. ஏனெனில் சில வேலைகளை அது மட்டுமே செய்யும். இரண்டாவதாக, செயற்கை நுண்ணறிவு மிகவும் விலை உயர்ந்தது. மூன்றாவதாக செயற்கை நுண்ணறிவு நம்ப முடியாத சக்தி வாய்ந்தது, எல்லோரும் தங்கள் வேலையை இழப்பார்கள், அதனால்தான் அவர்கள் மட்டுமே அதை உருவாக்கும் நிறுவனமாக இருக்க வேண்டும்.
அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
"செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்று நான் நினைக்கிறேன். நாம் அதை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் உருவாக்க வேண்டும். விஷயங்களை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செய்ய விரும்பினால், அதை வெளிப்படையாகச் செய்யுங்கள்.. இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு அது பாதுகாப்பானது என்று சொல்லாதீர்கள்" என்று ஹுவாங் மேலும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஹுவாங் நம்பினாலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் அல்ட்மன், செயற்கை நுண்ணறிவு வேலை சந்தையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மாறுபட்ட கருத்தை முன்வைத்து இருக்கிறார். எல்.எல்.எம் என்ற மேம்பட்ட தொழில் நுட்பத்தை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் அல்ட்மன் கூறுகையில், "வளர்ச்சியால் முழு வேலைப் பிரிவுகளே இல்லாமல் போகலாம்" என்றார்.
பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்
சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- "தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கும், மக்கள் எதற்கும் ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். முழு வேலைப் பிரிவுகளே இல்லாமல் போகும் கடினமான சூழ்நிலைகள் இருக்கும்.
ஆனால் அதே சமயம், உலகம் மிக வேகமாக வளரும். இதன் விளைவாக புதிய கொள்கைகளை உருவாக்க முடியும். ஒரு புதிய சமூக ஒப்பந்தத்தை ஒரே நேரத்தில் நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சில தசாப்தங்களுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, படிப்படியான மாற்றங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications