கருத்தரிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்! கொலம்பியா ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனை
பொகோட்டா: கொலம்பியா பல்கலைக்கழக கருத்தரிப்பு மையத்தின் மருத்துவர்கள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) முறையைப் பயன்படுத்தி தம்பதியினர் கர்ப்பம் தரித்திருப்பதாக அறிவித்துள்ளனர். இந்தத் தம்பதியினர் கிட்டத்தட்ட 19 வருடங்களாகக் குழந்தைக்காகக் காத்திருந்தனர். இந்த சாதனை மூலம் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைத்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கருத்தரிப்பு - ஒரு புதிய முயற்சி
கொலம்பியா பல்கலைக்கழக கருத்தரிப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், STAR (Sperm Tracking and Recovery) எனப்படும் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயல்முறையைப் பயன்படுத்தி பெண்ணை வெற்றிகரமாக செயற்கை முறையில் கருதரிக்க வைத்திருக்கின்றனர். ஏஐ முறையை பயன்படுத்தி இப்படி செய்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த சாதனை ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு, குறிப்பாக விந்துவில் உயிரணுக்கள் இல்லாத (azoospermia) நிலை உள்ளவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
Azoospermia என்றால் என்ன?
Azoospermia என்பது ஆண்களின் விந்துவில் உயிரணுக்கள் இல்லாத ஒரு நிலையாகும். இது ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணம், ஏனெனில் உயிரணுக்களே கருவை உருவாக்க அவசியமானவை. Azoospermia இருந்தால் இயற்கையான கருத்தரிப்பு கடினமாக இருக்கலாம். ஆனால், வேறு இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
Azoospermia-வில் பல வகைகள் உள்ளன:
முதல்வகை, விந்தணு தடை. அதாவது இனப்பெருக்க பாதையில் ஏற்படும் அடைப்பு விந்தணுக்கள் வெளியேறுவதைத் தடுக்கிறது. இது நோய்த்தொற்று, அறுவை சிகிச்சைகள் அல்லது பிறவி குறைபாடுகள் காரணமாக ஏற்படலாம்.
தடையற்ற Azoospermia: விந்தணுக்கள் உற்பத்தி ஆவதில் ஏற்படும் பிரச்சனை காரணமாக ஏற்படுகிறது. மரபணு கோளாறுகள், ஹார்மோன் சமநிலையின்மை அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
Azoospermia ஏற்பட பல காரணங்கள் உள்ளன:
மரபணு நிலைமைகள்: Klinefelter syndrome போன்ற சில மரபணு கோளாறுகள் விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை: டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.
நோய்த்தொற்றுகள்: இனப்பெருக்க பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், விந்தணுக்களை சேதப்படுத்தும்.
அறுவை சிகிச்சை முறைகள்: முன்பு செய்த அறுவை சிகிச்சைகள், குறிப்பாக இனப்பெருக்க பகுதிகளில் செய்த அறுவை சிகிச்சைகள் சில நேரங்களில் அடைப்புக்கு வழிவகுக்கும்.
பிறவி குறைபாடுகள்: ஒரு சிலர் இனப்பெருக்க அமைப்பில் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். இது விந்தணு உற்பத்தி அல்லது விநியோகம் பாதிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் Azoospermia-வை வெல்லுதல்
ஆண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களில் 10% வரை Azoospermia காரணமாக இருக்கிறது. இதை சரி செய்ய நம்மிடம் பழைய வழிமுறைகள்தான் இருந்தது. ஆனால் இதை வைத்துக்கொண்டு, விந்துவில் உள்ள உயிரணுக்களை சிறப்பாக அடையாளம் காண முடியாமல் இருந்தது.
இந்த இடத்தில்தான் செயற்கை நுண்ணறிவின் தேவை இருக்கிறது. அதாவது கொலம்பியாவின் STAR அமைப்பு, அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டையும் பயன்படுத்தி விந்து மாதிரிகளை ஸ்கேன் செய்கிறது. இது ஒரு மணி நேரத்திற்கு 80 லட்சம் படங்களை எடுக்கக்கூடியது. இந்த AI அல்காரிதம், விந்துவில் உள்ள உயிரணுக்களை சிறப்பாக அடையாளம் காண்கிறது.
உயிரணுக்கள் அடையாளம் காணப்பட்டதும், ஒரு மைக்ரோஃப்ளூயிட் சிப் அவற்றை தனித்தனி சேனல்களுக்குள் செலுத்துகிறது. இதை பாதுகாப்பாக வைத்திருந்து கருப்பைக்குள் செலுத்தப்படும்போது, கரு உருவாகிறது. 100% இது வெற்றியை கொடுத்திருக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் மருத்துவ அறிவியலையும் மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் ஒன்றிணைப்பதாகும். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகக் குழந்தைக்காக ஏங்கிய ஒரு தம்பதியரின் வாழ்க்கையில் இது இரண்டும் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 முறை IVF சிகிச்சை தோல்வியடைந்தும், பலமுறை ஏமாற்றங்களைச் சந்தித்த பின்னரும், STAR அமைப்பு இவர்களுக்கு வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.
கொலம்பியா பல்கலைக்கழக கருத்தரிப்பு மையத்தின் இயக்குனரும், STAR திட்டத்தின் தலைவருமான டாக்டர். ஜெவ் வில்லியம்ஸ், மலட்டுத்தன்மை சவால்களை எதிர்கொள்வதில் AI-யின் திறனைப் பற்றி நம்பிக்கை தெரிவித்தார். STAR அமைப்பு Azoospermia-வை சமாளிக்க உருவாக்கப்பட்டாலும், கருவின் தேர்வு மற்றும் மரபணு பரிசோதனை போன்ற கருவுறுதல் சிகிச்சையின் பிற அம்சங்களை மேம்படுத்த இதே போன்ற AI-உந்துதல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலம்
STAR அமைப்பின் வெற்றி மகப்பேறு மருத்துவத்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கருவுறுதல் சிகிச்சையில் AI-ஐ ஒருங்கிணைப்பதன் மூலம், மருத்துவர்கள் அதிக துல்லியத்தையும் செயல்திறனையும் அடைய முடியும். இதன் மூலம் கருத்தரிக்க தேவையான சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, ஒட்டுமொத்த வெற்றி விகிதங்களை மேம்படுத்தலாம்.
மேலும், உயிரணுக்களை அடையாளம் காணுதல் மற்றும் பிரித்தெடுக்கும் செயல்முறைகளை ஆட்டோமேட்டிக்காக மாற்றுவதால், கருவுறுதல் நிபுணர்களின் பணிச்சுமையைக் குறையும்.
STAR அமைப்பு இன்னும் சோதனை கட்டத்தில் இருந்தாலும் அதன் வெற்றி, கருவுறுதல் பராமரிப்பின் எதிர்காலத்திற்கான ஒரு முன்னோட்டத்தை வழங்குகிறது. இது தொடர்பாக OpenAI CEO சாம் ஆல்ட்மேன் AI புரட்சி மற்றும் அதன் தாக்கம் குறித்து ஒரு முழு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications