Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏஐ சூறாவளி கையை மீறிப்போகுது.. பல ஆயிரம் ஊழியர்களை.. ஒரே நாளில் நீக்கிய மைக்ரோசாஃப்ட்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

2025 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 4% ஊழியர்களை, அதாவது 9,100 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. இதற்கு முன்பு, மே மாதத்தில் சுமார் 6,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிக முதலீடு செய்துள்ளதால் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் சுமார் 4 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது. தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், சமீபத்திய வேலை வெட்டுக்களை அறிவித்துள்ளது.

ஜூன் 2024 நிலவரப்படி, உலகளவில் சுமார் 2,28,000 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனம், முன்னதாக மே மாதத்தில் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. குறிப்பாக விற்பனைப் பிரிவில் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

Ai is getting out of hand Microsoft laid off more than 9000 workers on single day

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதி நிலை

விண்டோஸ் தயாரிப்பாளரான மைக்ரோசாஃப்ட், 2025 நிதியாண்டிற்காக $80 பில்லியன் முதலீட்டுச் செலவை உறுதி செய்திருந்தது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான செலவுகள் அதிகரித்ததால், ஜூன் காலாண்டில் அதன் கிளவுட் லாபம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்டின் பார்சிலோனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிங் பிரிவு, அதாவது "Candy Crush" வீடியோ கேமை தயாரிக்கும் பிரிவு, அதன் ஊழியர்களில் 10% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டது. அதாவது சுமார் 200 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், ஊழியர்களின் பணித்திறன் மதிப்பீட்டில் AI கருவிகளின் பயன்பாடு ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதாவது ஏஐ கற்றுக்கொள்ளுங்கள், அதை அதிகம் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் உங்கள் பணிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று அறிவித்து உள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மேலும் பணிநீக்கங்கள் வரவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் நிறுவனத்தின் உள் - செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஏஐயை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய அணுகுமுறை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறது.

அதுமட்டுமின்றி, ஊழியர்களின் பணித்திறனை மதிப்பிடும்போது, இந்த AI கருவிகளின் பயன்பாடும் ஒரு காரணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலின்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது சொந்த AI சேவைகளை ஊழியர்கள் குறைவாக பயன்படுத்துவது குறித்து கவலை கொண்டுள்ளது. அதாவது தங்கள் ஊழியர்களின் பணிகளுக்காக நிறுவனம் உருவாக்கிய சொந்த ஏஐகளை ஊழியர்கள் பயன்படுத்துவது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எனவே, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட AI கருவிகளை ஊழியர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை வைத்து அவர்களின் செயல்திறனை மதிப்பிடுமாறு மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெவலப்பர் பிரிவின் தலைவர் ஜூலியா லியூசன், ஊழியர்களுக்கு அனுப்பிய உள் மின்னஞ்சலில் "AI இப்போது நாம் பணிபுரியும் முறையில் ஒரு அடிப்படை பகுதியாக உள்ளது. டீம் வொர்க், சரியாக பணி செய்தல், நேரத்திற்கு வேலைக்கு வருதல், முறையான தகவல்தொடர்பு போன்றே, AI பயன்பாடும் இனி கட்டாயமான ஒன்று. இது எல்லா ஊழியர்களுக்கும் முக்கியமானது," என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஊழியர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பீட்டில் AI பயன்பாட்டை ஒரு காரணியாகக் கருத்தில் கொள்ளுமாறு மேலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது ஹைக் வேண்டும் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவன ஏஐயை பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+