நடிகர் லிவிங்ஸ்டனுக்கு என்ன ஆச்சு? திடீரென கதறி அழுது சொன்ன விஷயம்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல கேரக்டர்களில் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகர் லிவிங்ஸ்டன் இப்போது அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11 நிகழ்ச்சியில் அவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த வாரம் சமீபத்தில் மறைந்த இயக்குனர் கே. பாக்யராஜ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் இயக்கிய மற்றும் நடித்த படங்களின் இடம்பெற்ற பாடல்கள் சிறுவர்கள் மூலம் பாடப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் ஒரு காலத்தில் பாக்கியராஜுடன் உதவி இயக்குனராக இருந்த லிவிங்ஸ்டனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாடல்
நிகழ்ச்சியின் போது ஒரு சிறுவன் "ஓடைகாரை பூங்காற்றே" என்ற பாடலை பாட தொடங்கியவுடன் லிவிங்ஸ்டனின் முகமே மாறியது. பாடல் வரிகளில் ஒலிக்க ஒலிக்க தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலை கண்கலங்கி அழுதார். அருகில் இருந்தவர்கள் ஆறுதல் சொன்னாலும் அவரது கண்களில் வலிந்த கண்ணீர் பலரையும் உருக வைத்து விட்டது.

கதறி அழுத நடிகர் லிவிங்ஸ்டன்
அதன் பிறகு அந்த சிறுவனுடன் சேர்ந்து லிவிங்ஸ்டனும் அந்த பாடலை மெதுவாக பாடிய தருணம் நிகழ்ச்சியில் எமோஷனலான காட்சிகளாக மாறியது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு ஆழமான பாசமாக இருந்தால் இப்படி உடைந்து அழுவார்.. என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பலருக்கு லிவிங்ஸ்டனை நடிகராக தெரியும் ஆனால் அவருடைய சினிமாப் பயணம் நடிகராக தொடங்கவில்லை.
கிறிஸ்துவத்திலிருந்து இந்து மதத்திற்கு போயிட்டேன்.. காரணம் இதுதான்.. லிவிங்ஸ்டன் சொன்ன பதில்
இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். அந்த அனுபவம் தான் பிறகு அவரை நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மாற்றியது. தொடர்ந்து கேப்டன் பிரபாகரன், சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி, விரும்புகிறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் காமெடி நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

லிவிங்ஸ்டனின் மாற்றம்
சமீப காலமாக லிவிங்ஸ்டன் தோற்றத்திலும் உடல் நிலையிலும் ஏற்பட்ட மாற்றம் குறித்து ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் தனது குருநாதரை நினைத்து அவர் மேடையிலே கண்ணீர் வடித்தது ரசிகர்களை இன்னும் அதிகமாக பாதித்து இருப்பதாக பலர் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
போற்றி பாடடி கண்ணே! சூப்பர் சிங்கரில் பிரபலங்களை கலங்க வைத்த சிறுவன்.. அம்மாவின் உருக்கமான வார்த்தை
இன்னும் ஒரு சிலர் ஒரு காலத்தில் பாக்யராஜிடம் இவரும், பார்த்திபன், பாண்டியராஜ் மூன்று பேரும் முந்தானை முடிச்சு பட சமயத்தில் திடீரென சொல்லாமல் போய்விட்டார்கள் என்ற விமர்சனங்கள் இருந்தது. ஆனால் தன்னுடைய குரு இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் இவர் உடைந்து போய் விட்டாரே என்று பழைய சம்பவங்களை பற்றியும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
