கிறிஸ்துவத்திலிருந்து இந்து மதத்திற்கு போயிட்டேன்.. காரணம் இதுதான்.. லிவிங்ஸ்டன் சொன்ன பதில்
சென்னை: நடிகர் லிவிங்ஸ்டன் நான் கிறிஸ்டியன் ஆக இருந்து இப்போது இந்து மதத்திற்கு மாறி இருக்கிறேன் என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு அதற்கான காரணத்தை பற்றியும் அவர் அதில் விவரித்து இருக்கிறார்.
லிவிங்ஸ்டன் சொன்ன காரணத்தை கேட்டு நெட்டிசன்களில் ஒரு சிலர் அவரை திட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் வெள்ளித்திரையில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் கொடி கட்டி பறந்த பல நடிகைகள் பிறகு தங்களுக்கு அங்கு மார்க்கெட் சரிய தொடங்கியதும் சீரியல் நோக்கி வருவது இயல்புதான். அந்த மாதிரி ஒரு சில நடிகர்களும் கதாநாயகர்களாக நடித்துவிட்டு இப்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் லிவிங்ஸ்டன்.இவர் நடிகர் ஆக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகத் திறமையை கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தான் மதம் மாறியது தொடர்பாக பேசி இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. லிவிங்ஸ்டன் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்களுக்கு இவருடைய பெயரை ராஜன் என்று பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார்.
பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் லிவிங்ஸ்டனுக்கு நடிக்க வாய்ப்பு விஜயகாந்த் மூலமாக கிடைத்தது என்று பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். காரணம் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையிலிருந்த லிவிங்ஸ்டன் நடிகர் விஜயகாந்திடம் கதை சொல்வதற்காக போயிருக்கிறார். அப்போது லிவிங்ஸ்டன் கதை சொன்ன அழகைப் பார்த்து அவரை பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் நடிக்க சொல்லி இருக்கிறார்.
பிறகு விஜயகாந்தின் பேச்சை தட்ட முடியாமல் லிவிங்ஸ்டனும் சரி என்று சம்மதம் சொல்லி இருக்கிறார். இப்படியாக இயக்குனராக வேண்டும் என்று கனவில் இருந்து லிவிங்ஸ்டன் நடிகராக மாறி இருந்தார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டன் சுந்தர புருஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இது அந்த நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இப்போது முன்னணி நடிகர்கள் பலரோடு குணச்சித்திர வேடங்களிலும், முக்கியமான கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். லிவிங்ஸ்டனுக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் ஜோவிகா இவர் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் லிவிங்ஸ்டன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் கண்ணான கண்ணே சீரியல் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது இந்த நிலையில் இப்போது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் பேட்டி ஒன்றில் நான் மதம் மாறலாம் என்று நினைத்தேன். கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது.
இதனால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்து விட்டேன். அதனுடைய பொட்டு தான் வைத்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பல கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகிறார்கள். எப்படி ஒரு மதம் போர் அடித்து விடும்? நீங்கள் உண்மையாக மதத்தை நேசிப்பவர் இல்லை என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications