AI vs மனிதர்கள்.. "இன்னும் 24 மாதங்கள் தான்.." ஒட்டுமொத்த AI வல்லுநர்களும் சொல்வது ஒரே மேட்டர் தான்
டெல்லி: உலகையே இப்போது ஏஐ துறை தான் மொத்தமாகப் புரட்டிப் போட்டு வருகிறது. ஒரு பக்கம் AI நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. மறுபுறம் ஏஐயால் பல வேலைகள் காலியாகிறது. இதற்கிடையே ஏஐ தொடர்பாகவும் ஏஐ வேலையிழப்பு தொடர்பாகவும் சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஏஐ காரணமாக வேலையிழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் கடந்த சில காலமாகவே மக்களிடையே பரவலாக உள்ளது. கூகுள், அமேசான், டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் AIஐ காரணமாகச் சொல்லிப் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

சாம் ஆல்ட்மேன்
இதற்கிடையே ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஆட்குறைப்பு தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது இந்த அனைத்து வேலை இழப்புகளுக்கும் ஏஐ மட்டுமே காரணம் இல்லை என்று அவர் தெரிவித்தார். இந்தியா ஏஐ இம்பேக்ட் உச்சி மாநாடு 2026ல் பேசிய ஆல்ட்மேன், உண்மையில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதாவது பல நிறுவனங்கள் தங்கள் ஆட்குறைப்புக்கு AIஐ ஒரு சாக்காகப் பயன்படுத்துகின்றன என்றும் இதை "ஏஐ வாஷிங்" என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக சிஎன்பிசிக்கு அவர் அளித்த பேட்டியில், "AI காரணமாகச் சொல்லி பணிநீக்கம் கணிசமாக நடந்து வருகிறது. வேலைநீக்கம் செய்துவிட்டு சம்பந்தமே இல்லாமல் ஏஐ மீது பழிபோடுகிறார்கள். இது ஒரு வகை ஏஐ வாஷிங் ஆகும்" என்று கூறினார். ஆட்குறைப்பு முடிவுகளுக்கு ஏஐ முதன்மைக் காரணமாக இல்லாதபோதும், பல நிறுவனங்கள் AIஐ காரணமாகச் சொல்வதாக ஆல்ட்மேன் சுட்டிக்காட்டினார். அவர் எந்த நிறுவனத்தையும் குறிப்பிடவில்லை.
வேலையிழப்புகள்
ஆனால், அதற்காக ஏஐயால் வேலையிழப்புகளே ஏற்படவில்லை என்றும் சொல்ல முடியாது.. சில வேலைகள் ஏஐயால் நேரடியாகப் பாதிக்கப்படுவதை சாம் ஒப்புக்கொண்டார். AI வருகையால் மொத்த வேலைவாய்ப்பு சந்தையும் மாறி வருகிறது. இவை எல்லாம் ஒரு மாதிரி செட்டிலாக சில காலம் ஆகும் என்பது அவரது கருத்து.
டேட்டா சொல்வது என்ன!
சேலஞ்சர், கிரே & கிறிஸ்துமஸ் என்ற ஆலோசனை நிறுவனமும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் கூறியுள்ளது. 2025ஆம் ஆண்டில் சுமார் 55,000 வேலையிழப்புகள் ஏஐயால் ஏற்பட்டுள்ளது. இது அதிகம் போலத் தோன்றினாலும், கடந்தாண்டு ஏற்பட்ட ஒட்டுமொத்த வேலையிழப்புகளில் இது ஒரு சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளில் ஏஐயால் பெரிய மாற்றம் இல்லை என்பதே NBER எனப்படும் தேசியப் பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் கருத்தாகும். உண்மை இப்படி இருந்தாலும், சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்புக்கு ஏஐயை ஒரு காரணியாகக் காட்டுகின்றன.
ஏஐ வேலைகளைப் பாதித்தாலும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று சாம் ஆல்ட்மேன் நம்புகிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு தொழில்நுட்பப் புரட்சியிலும் நாம் புதிய வகையான வேலைகளைக் கண்டறிவோம். அதேபோலத் தான் ஏஐ வந்தாலும் புதிய வேலைகள் உருவாகும். இவை எல்லாம் செட்டிலாக சில காலம் ஆகும்" என்றார்.
AI vs மனிதர்கள்
ஏஐ தாக்கம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளைக் கூறுகிறார்கள். ஏஐயால் பறிபோகும் வேலைகள் அளவுக்குப் புதிய வேலைகள் உருவாகாது என்கிறார் ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடி! அடுத்த பதினெட்டு மாதங்களுக்குள் அனைத்து ஒயிட் காலர் வேலைகளும் ஏஐயால் மாற்றப்படலாம் என்றார் மைக்ரோசாஃப்ட்டின் ஏஐ தலைவர் முஸ்தபா சுலைமான்!.
அதேநேரம் இன்போசிஸ் தலைவர் ஏஐயால் பறிபோகும் வேலைகளைக் காட்டிலும் புதிய வேலைகள் உருவாகும் என்றார். இப்படி ஒவ்வொரு தரப்பினும் ஏஐ தொடர்பாக ஒவ்வொரு கருத்துகளைச் சொல்கிறார்கள். இருப்பினும், அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு பாயிண்டு. ஏஐ தாக்கம் தெளிவாக இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும். அதுவரை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்!
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications