Cognizant நிறுவனத்தில் ஐடி வேலை ரெடி.. அனுபவம் தேவையில்லை.. ஜூலை 15 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025, 2026ம் ஆண்டில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை காக்னிசண்ட் ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஜூலை 15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்னிசண்ட் (Congnizant) ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது Digital Workplace Practice (Service Desk) என்ற பெயரில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

cognizant-hiring-for-digital-workplace-practice-roles-apply-before-july-15

இது Fresher-க்கான பணியாகும். இதனால் விண்ணப்பம் செய்வோருக்கு எந்த முன்அனுபவமும் வேண்டாம். அதேவேளையில் சில முக்கிய தகுதிகள் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பம் செய்வோர் கட்டாயம் டிகிரி முடித்திருக்க வேண்டும். எந்த பிரிவாக இருந்தாலம் 3 ஆண்டு டிகிரி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 மற்றும் 2026ம் ஆண்டில் பிகாம், பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிபிஏ, B.Voc, Bms உள்ளிட்ட பிற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இவர்களுக்கு அரியர்ஸ் இருக்க கூடாது. Re Evaluation செய்திருப்போரும் விண்ணப்பம் செய்யலாம். அவர்கள் கட்டாயமாகதங்களின் முந்தைய ரிசல்ட் விவரங்களை வைத்திருக்க வேண்டும். இதுதவிர 10, 12ம், டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதத்துக்கு அதிகமாக கட்டாயம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டெக்னாலஜி தொடர்பான விபரங்களை விரைவாக கற்று கொண்டு Client-களிடம் எடுத்து சொல்வதற்கான திறமை இருக்க வேண்டும். இந்த பணிக்கு நைட்ஷிப்ட் என்பது இருக்கும். இதனால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

இது PAN India பணியாகும். இதனால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூரிலும் காக்னிசண்ட் அலுவலகம் உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் இருப்பினும் அங்கும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
இந்த பணிக்கு PAN Card, ஆதார் கார்டு கட்டாயமாகும்.

அது இல்லாவிட்டால் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதில் உங்களின் பெயர் முகவரி சரியாக இருக்க வேண்டும். சான்று மற்றும் பார்ன் கார்டு இடையே வித்தியாசம் இருந்தால் உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களின் பின்னணி விபரங்கள் முழுவதும் அறிந்தே பிறகே நியமனம் செய்யப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இண்டர்வியூ செல்லும்போது 2 பக்க ரெஸ்யூம் வைத்திருக்க வேண்டும். அதில் ஹை ரெஸ்சொல்யூஷனில் போட்டோ இருக்க வேண்டும். இந்த பணிக்கு சர்வீஸ் பாண்ட் கிடையாது. நைட்ஷிப்ட் அலோவன்ஸ் உண்டு.

அதேபோல் நிறுவனத்தில் இருந்து உயர்கல்விக்கும் ஸ்பான்ஷர்ஷிப் செய்யப்படும். டைம்லி ரிவார்ட்ஸ் உள்ளது. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+