உலகில் மருத்துவமனையே இல்லாத ஒரே நாடு இதுதான்! மக்கள் அவசரத்திற்கு என்ன பண்ணுவாங்க தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த நவீன கால கட்டத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் அப்படியான ஒரு நாடு உள்ளது. அது எங்கு இருக்கிறது?, மருத்துவமனை இல்லையென்றால் அங்கு வசிக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? நோய்களே வராதா? என்றெல்லாம் உங்களுக்கு மனதில் கேள்விகள் எழும். இதற்கான விடையை இங்கே விரிவாக பார்ப்போம்.

ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றாக மருத்துவமனைகள் உள்ளன. நாட்டில் வாழும் மக்களின் ஆரோக்கியம் அந்த நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை வைத்தும் மதிப்பிடப்படுகிறது என்றால் மிகையல்ல. எனவே, ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களின் மருத்துவ தேவைகளை தீர்க்க வலுவான சுகாதார கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

hospitals of its own Does no one there ever get sick

மருத்துவமனையே இல்லாத நாடு

இப்படி ஒரு நாட்டிற்கு முக்கிய தேவையாக மருத்துவமனை இருந்து வரும் நிலையில் தற்போதைய நவீன காலத்திலும் கூட மருத்துவமனைகள் இல்லாமல் இந்த நாடு இயங்கி வருகிறது. மருத்துவமனையே இல்லாத நாடு என்றதும் ஏதோ ஆப்பிரிக்கா நாடாக இருக்குமோ என்று நீங்கள் நினைத்து இருக்கக் கூடும். ஆனால் அது அல்ல.. உண்மையில் அந்த நாடு அனைவருக்கும் பரிட்சயமான ஒரு நாடுதான்.. உலகிலேயே குட்டி நாடு என்று அழைக்கப்படும் வாடிகன் சிட்டி நாடுதான் உலகில் பெரிய அளவில் மருத்துவ கட்டமைப்புகள் இல்லாத நாடாகும்.

இத்தாலியின் ரோம் நகரின் அருகே உள்ள வாடிகன் சிட்டி. தனிச்சையான நிர்வாக அமைப்பு கொண்ட நாடாகும். வாடிகன் சிட்டியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமாக இது உள்ளது. வெறும் 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாடிகன் சிட்டியில் வசிக்கும் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையே வெறும் 1,000-த்திற்கும் குறைவுதான்.

இத்தாலிக்குதான் செல்ல வேண்டும்

கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவரின் வசிக்கும் இடமாக இந்த நாடு உள்ளது. இந்த இடத்தில் இருந்துதான் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகிறன. உலகின் மிகவும் புனிதமான இடமாக உள்ள இந்த வாடிகன் சிட்டியில் வசிக்கக் கூடிய மக்களுக்கு ஒரு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், முதலுதவி அளிப்பதற்கு சிறிய ரக மருத்துவ மையங்கள் உள்ளன.

ஒருவேளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும் என்றாலோ.. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றாலோ அருகில் இருக்கக் கூடிய இத்தாலிக்குதான் செல்ல வேண்டும். அதி நவீன சிகிச்சை பெற வேண்டும் என்றால் உடனடியாக ரோம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளன

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி மற்றும் அதன் தலைநகரில் நவீன மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. நோயாளிகளின் மருத்துவ அவசர தேவைக்கு ஏற்றார் போல் உடனடியாக அனுமதிக்க வாடிகன் நகரில் இருந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளும் உள்ளன.

பரப்பளவில் மிகச்சிறிய நாடான வாடிகன் சிட்டியில் பெரும்பாலும் மத கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், அருங்காட்சியங்கள், போப் தங்கியிருக்கும் வீடு உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. அந்த நகர வடிவமைப்புக்கு ஏற்ற வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+