பெண் காவலர்க்கு ஆபாச வாட்ஸ்ஆப் மெசேஜ்.. யூனிஃபார்மை கழற்றிய காவல்துறை! திலீபனுக்கு இது தேவையா?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்த நிலையில் காவல் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் உரிய அனுமதியின்றி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணிக்கு வராத காரணத்தால் திலீபன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தான் திலீபன், இவர் அங்கு பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு அளித்ததாக புகார் அளித்திருந்தார் அந்த பெண் காவலர்,

Thoothukudi Police

திலீபனின் பாலியல் தொந்தரவு தாங்காமல் அந்த பெண் காவலர் பணியிட மாற்றத்துக்கு விண்ணப்பித்த போது, திலீபன் இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண் காவலரின் கணவர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர் திலீபனிடம் நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக பெண் காவலரின் கணவரை ஆய்வாளர் திலீபன் மிரட்டி இருக்கிறார். இதை அடுத்து பெண் காவலர் அளித்த புகார் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் திலீபன் பனியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் விளக்கம் அளித்திருந்த நிலையில், அதற்குப் பிறகு பணிக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. பின்னர் 2023 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திலீபன் பணியாற்றினர். அப்போது சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் அயல் பணியில் நியமிக்கப்பட்டார்.

அந்தப் பணிக் காலத்தில் முன் அனுமதி பெறாமலும் உரிய தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்ததாக திலீபன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவ குழுவின் முன் ஆஜராகுமாறு காவல்துறை தரப்பில் திலீபனுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை என சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போதும் திலீபன் உரிய ஒத்துழைப்பு அழைக்கவில்லை எனவும் தனது தரப்பு விளக்கத்தை சமர்ப்பிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதை அடுத்து தொடர் ஒழுங்கின நடவடிக்கைகளில் திலீபன் ஈடுபட்டதை தொடர்ந்து திலீபனை பணியில் இருந்து நீக்கம் செய்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவு அவருக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த திலீபன் தற்போது காவல்துறை பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+