அப்பாவாக "இதை” செய்ய தவறிட்டேன்! மகள் மறைவிலிருந்து மீள முடியவில்லை! விஜய் ஆண்டனி உருக்கம்
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'அப்பா குட்டி' படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனில் பல வருடங்களுக்கு பிறகு விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவும், அவருடைய மகள் சாராவும் கலந்து கொண்டனர். அப்போது சாரா பேசியதை பார்த்து நெகிழ்ந்து போன விஜய் ஆண்டனி தன்னுடைய மூத்த மகள் மீராவை நினைத்து உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
அப்பா குட்டி படத்தில் விஜய் ஆண்டனியுடன் ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லித்தன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மு மாறன் படத்தின் கதையை எழுதி, இயக்கி இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியான பிறகு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று நடந்த படத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கண்கலங்க பேசியிருக்கிறார். முன்னதாக பேசிய அவருடைய 2வது மகள் சாரா முதலில் தூய தமிழில் பேசினார், பிறகு படத்தை பற்றியும் தன்னுடைய அப்பா பற்றியும் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார்.

விஜய் ஆண்டனி பேச்சு
மகள் பேசியதை எல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி பிறகு மேடை ஏறி பேசும் போது, "என்னுடைய மகள் சாரா பேசியதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருந்தது. அவளுக்கு மேடை பயம் உண்டு. அதனால் மேடையில் அவள் பேச மாட்டாள் என்று நினைத்து கொண்டிருந்தேன். முதல் முறையாக அவர் மேடையில் பேசும்போது அவ்வளவு அழகாக பேசிவிட்டாள்.
நான் இதற்கு முன்பு என்னுடைய மூத்த மகளை இதுபோல நிகழ்ச்சியில் பேச வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது எனக்கு நடக்காமலேயே போய்விட்டது. ஒரு தந்தையாக இதை செய்ய முடியாமல் போனது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இரண்டாவது மகள் இன்று அழகாக பேசி இருந்தாலும் மீராவுக்கு இந்த விஷயம் நடக்காதது வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது" என்று விஜய் ஆண்டனி பேசிக்கொண்டிருக்கும் போது இதை கேட்டுக் கொண்டிருந்த அவருடைய மனைவி அழுதுவிட்டார்.
பாத்திமா பேச்சு
பிறகு விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா பேசும் போது, "எங்களுடைய மகள் மீராவின் மறைவு எங்களோட குடும்பத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. புத்திர சோகத்தில் இருந்து மீள முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். 5 வருடங்களுக்கு பிறகு இந்த பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு பேசுகிறேன். அதற்கு காரணம் கூட என்னுடைய உலகமாக இருக்கும் விஜய் ஆண்டனி மற்றும் படத்தின் இயக்குனர் தான். அவர்களுக்காகத் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அவர்கள் தான் என்னை வெளியே வர வைத்தார்கள்" என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
செருப்பு, வாட்ச் ரகசியம்
மேலும், "விஜய் ஆண்டனி செருப்பு போடாமல் இருக்கும் காரணம் கூட, என்னுடைய மகளுக்காக நாங்கள் 50-லிருந்து 100 ஷு, செருப்பு வாங்கி வைத்திருந்தோம். ஆனால் அவள் அதை எல்லாம் போடாமலே போய்விட்டாள். அதற்கு பிறகு தான் விஜய் ஆண்டனி நான் இனி செருப்பு போட மாட்டேன் என்று முடிவு எடுத்திருந்தார். அதுபோல விஜய் ஆண்டனி கையில் கட்டி இருக்கும் வாட்ச் கூட என்னுடைய மகளுக்காக நான் வாங்கி கொடுத்தது. அதைத்தான் இப்போ பல வருடங்களாக தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார்" என்றும் குடும்ப ரகசியத்தை பற்றி ஓபனாக பேசி இருந்தார்.
அப்பா இல்லாத கொடுமை
தொடர்ந்து அவர் பேசுகையில், "என்னுடைய அப்பா எனக்கு 7 வயதாக இருக்கும் போது எங்களை விட்டு விட்டு போய்விட்டார். அதற்கு பிறகு எனக்கும் என்னுடைய தங்கைக்கும் அப்பா பாசம் இல்லாமல் வளர்ந்தோம். அதற்குப் பிறகு இப்போ வரைக்கும் என்னுடைய கணவர் தான் எனக்கு அப்பாவாக இருக்கிறார். என்னுடைய மகள் மீரா எங்கே இருந்தாலும் நல்லா இருப்பா... இந்த ஷோவை நீ நடத்திக் கொடு மீரா" என்று விஜய் ஆண்டனி மனைவி பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
ரசிகர்கள் ஆறுதல்
அப்பா மகளின் பாசத்தை சொல்லும் அப்பா குட்டி படத்தின் ப்ரோமோஷனில் விஜய் ஆண்டனி மற்றும் அவருடைய மனைவி இருவரும் பேசியதும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மகளை இழந்த வலி வேதனை எந்த அளவிற்கு கொடுமையானது என்பது அந்த சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு தான் தெரியும். ஆனால் மனதிற்குள் எத்தனையோ சோகங்கள் இருந்தாலும் வெளியில் பலருக்கு மோட்டிவேஷனாகவே விஜய் ஆண்டனி பேசிக் கொண்டிருப்பார். இப்போது அவரும் சோகமாக பேசியதை பார்த்ததும் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்



Click it and Unblock the Notifications
