டெவலப்பர்கள் இனி தேவையில்லை.. மொத்தமாக கையில் எடுக்கும் AI.. இந்திய ஐடி துறை மொத்தமா மாறுது!
சென்னை: AI வந்த பிறகு நாம் வேலை செய்யும் முறையே முழுமையாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக ஐடி சந்தையில் இது மிகப் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதற்கிடையே டெவலப்பர்கள் எதிர்காலம் காலி என்பதைச் சொல்லும் வகையில் அவர்களுக்குப் பிரியாவிடை கொடுப்பது போல சாட்ஜிபிடி சிஇஓ சாம் ஆல்ட்மேன் போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஒரு சாப்ட்வேரை உருவாக்குவது என்பது பல மாத அல்லது ஆண்டு வேலையாக இருந்தது. பல நூறு ஊழியர்கள் மணிக்கணக்கில் அமர்ந்து, ஒவ்வொரு வரியையும் கோடிங் செய்ய வேண்டும். அதை டெஸ்ட் செய்து, பிழைகள் இருந்தால் அதைத் துல்லியமாகச் சரி செய்ய வேண்டும். இப்படி ஒரு சாப்ட்வேருக்கு பெரிய வேலை இருந்தது. இதுவே இந்திய ஐடி மார்கெட்டின் அடிப்படையாக இருந்தது.

AI தொழில்நுட்பம்
ஆனால், இப்போது AI வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. அந்த வேலைகளின் சில பகுதிகளை AI கையிலெடுக்கத் தொடங்கியுள்ளதால், கோடிங் வல்லுநர்களின் தேவை குறையுமோ என்ற விவாதம் உருவாகியுள்ளது. அப்படி நடந்தால் அது இந்திய ஐடி சந்தைக்குப் பெரிய அடியாகவே இருக்கும். இந்தச் சூழலில் தான் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துள்ளார். டெவலப்பர்களுக்கு பிரயாவிடை கொடுப்பது போல அவர் போஸ்ட் செய்துள்ளார். ஏஐ வந்துவிட்டதால் இனி டெவலப்பர்கள் தேவை இருக்காது என்பதையே அவர் சொல்ல வருவதாக நெட்டிசன்கள் சொல்கிறார்கள்.
சாம் ஆல்ட்மேன் சர்ச்சை
இது தொடர்பா சாம் ஆல்ட்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் சிக்கலான சாப்ட்வேரை ஒவ்வொரு வரியாக எழுதிய டெவலப்பர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சாப்ட்வேரை உருவாக்க எவ்வளவு முயற்சி தேவைப்பட்டது என்பதை நினைவில் கொள்வது இப்போதே கடினமாக இருக்கிறது. இந்த இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்த உங்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். அதாவது ஏஐ வந்துவிட்டதால் சாப்ட்வேர் உருவாக்குவது ஈஸியாகிவிட்டது என்றும் இதனால் பழைய முறையை இப்போதே மக்கள் மறக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதைப் போல அவர் ட்வீட் செய்துள்ளார்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இந்த AI காலத்தில் கோடிங் எழுதுவது, பிழைகளைச் சரி செய்வது, அனலைஸ் செய்வது என அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு காலத்தில் டெவலப்பர்கள் பல மாதங்கள் நேரம் செலவிட்டு உருவாக்கிய சாப்ட்வேர் இப்போது வெறும் சில நாட்களில் உருவாக்க முடிகிறது. ஏஐ உதவியுடன் ஓரிரு சீனியர் கோடிங் வல்லுநர்களே இந்த வேலைகளை முடித்துவிடுகிறார்கள். இதனால் வரும் காலங்களில் ஜூனியர் கோடிங் வல்லுநர்கள் தேவை குறையும் என தெரிகிறது. ஸ்ரீதர் வேம்பு, அரவிந்த் சுவாமி உள்ளிட்டோரும் இதைக் கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
அதேநேரம் அனைவருமே இதைக் கருத்தைச் சொல்லவில்லை. ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் ஐடி துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்பது உண்மை தான் என்றாலும் இதனால் அழிந்து போகாது என்கிறார்கள். AI உற்பத்தித் திறனை அதிகரிக்கும் சூழலில் அதற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வோர் ஈஸியாக அடுத்த கட்டத்தை அடைவார்கள் என்கிறார்கள்.
இரு பெரிய கவலைகள்
ஆனாலும், இரு கவலைகள் தெளிவாகத் தெரிகிறது. முதலில் தற்போதுள்ள வேலைவாய்ப்புகளைக் காட்டிலும் ஐடி துறையில் வரும் காலங்களில் வேலைவாய்ப்புகள் கணிசமாகக் குறையும். அதேபோல ஜூனியர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இந்த இரு கவலைகளையும் யாராலும் முழுமையாக நிராகரித்துவிட முடியாது. இந்தியாவில் பல லட்சம் பேர் ஐடி துறையில் உள்ள நிலையில், இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications