டெக் வேலைகளை.. அப்படியே விழுங்கும் AI! லே ஆஃப் இனி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்!
சென்னை: தொழில்நுட்ப நிறுவனங்கள் AI-ஐ நோக்கித் தங்கள் உத்திகளை மாற்றியமைத்தல், செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தங்களைச் சீரமைத்தல் ஆகிய காரணங்களால், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தற்போது நடந்து வரும் லேஆஃப்களுக்க காரணமே இதுதான்.
கடந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சுமார் 1,50,000-க்கும் அதிகமானோர் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறனர். வெறுமென ஆட்குறைப்பு மட்டுமட்டுமல்லாது துறை வேலைகளே நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் பல ஆயிரங்களாக அதிகரிக்கும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

வேலைகளை தானியங்கி முறையில் செய்தல், குறைவான லாபம் தரும் அல்லது பழைய திட்டங்களை நீக்குவது, ஹார்டுவேர், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்ட தளங்களில் செலவுகளைக் குறைத்து லாபத்தை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களுக்காக இந்த பணி நீக்கங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அமேசான் நிறுவனம் பணி நீக்கத்தை தொடர்ந்து செய்து வரும் நிறுவனமாகும். பல கட்டங்களில் ஆட்குறைப்புகளைத் தொடர்கிறது. அதேசமயம் AI துறையில் மட்டும் பணியமர்த்தலைத் தொடர்கிறது. கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு, பிக்சல் மற்றும் குரோம் பிரிவுகளில் ஆட்குறைப்புகளைச் செய்துள்ளது. கிளவுட் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட வடிவமைப்புப் பணிகளை நீக்கி, AI மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளில் ஊழியர்களைப் பயன்படுத்துகிறது.
மெட்டா நிறுவனம் ரியாலிட்டி லேப்ஸில் ஆட்குறைப்புகளைச் செய்துள்ளது. அடுத்த தலைமுறை AI தயாரிப்புகளில் கவனம் செலுத்த முயல்கிறது. இன்டெல் போன்ற நிறுவனங்கள் மறுசீரமைப்பு மற்றும் செலவுக் கட்டுப்பாடு காரணமாக ஆட்குறைப்பு செய்கின்றன. என்விடியா நிறுவனம் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பணியாளர்களை நீக்கி, வளங்களை முக்கியமான திட்டங்களுக்கு மாற்றியுள்ளது.
- அமேசான் 30,000
- இன்டெல் 24,000
- வெரிசோன் 15,000
- மைக்ரோசாப்ட் - 15,000
- அசென்சர் - 12,000
- டிசிஎஸ் - 12,000
- பானசோனிக் - 10,000
- செவ்ரான் - 10,000
- எஸ்டி லாடர் - 7,000
- டெலிபோனிக்கா - 6,000
பல நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரியாத ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். என்னதான் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், எதிர்காலத்தில் ஏஐ எனும் குமிழ் திடீரென வெடிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications