ரஜினி, சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் ஜனநாயகன்.. ரிலீசுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங்கில் செய்த சாதனை
சென்னை: இன்னும் சில மணி நேரத்தில் உலகமெங்கும் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜனநாயகன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே புதிய சாதனையை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே சோசியல் மீடியாவில் இந்த படத்தை சில நாட்களாக சிலர் கிண்டல் செய்து வந்தாலும் அதற்கு இப்போது அட்வான்ஸ் புக்கிங்கில் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
எக்ஸ் தளத்தில் கடந்த சில நாட்களாகவே ஜனநாயகன் படத்தின் முன்பதிவு குறித்து கடுமையான விவாதம் நடந்து கொண்டிருந்தது. சில சூர்யா ரசிகர்கள் கருப்பு படத்தின் முதல் நாள் டிக்கெட் முன்பதிவை ஜனநாயகனால் நெருங்கவே முடியாது என்று சொல்லி வந்தார்கள். இன்னும் ஒரு சிலர் ரஜினியின் கூலி படத்தின் சாதனையுடன் ஒப்பிட்டும் பேசி வந்தனர்.

ரசிகர்கள் விவாதம்
காரணம் ஜனநாயகன் படம் ஏற்கனவே சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டதால் இதை போய் யார் பார்ப்பார்கள் என்று சிலர் ட்ரோல் செய்தனர். ஆனால் முன்பதிவு ஜெட் வேகத்தில் தொடங்கிய பிறகு நிலைமையே மாறி விட்டதாக விஜய் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
அதாவது தற்போது சோசியல் மீடியாவில் வெளியான தகவலின் படி புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் தளங்களில் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முன்பதிவு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்ற தகவலை பகிரும் ரசிகர்கள் கருப்பு படத்தின் முதல் நாள் முன்பதிவை ஜனநாயகன் கடந்து விட்டதாக கூறி வருகிறார்கள். அதாவது புக் மை ஷோவில் முதல் நாளில் கருப்பு படம் 7 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட் விற்பனை செய்து சாதனை படைத்தது. ஆனால் நேற்று வெளியான தகவலின் படி ஜனநாயகன் 5 லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ததால் அதை சூர்யா ரசிகர்கள் கிண்டல் செய்து வந்திருந்தனர்.
ஜனநாயகன் அட்வான்ஸ் புக்கிங்
ஆனால் தற்போது 7.5 லட்சம் டிக்கெட்டுகள் கருப்பு படத்தை ஜனநாயகம் முந்தியதாக தகவல்கள் கூறப்படுகிறது. முன்பதிவு வேகம் அதிகரித்து இருப்பதால் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்து இருக்கிறது. விஜய்யின் முந்தைய படங்களான லியோ, கோட் போன்ற படங்கள் ஒரே நாளிலேயே பெரிய வசூல் சாதனையை பதிவு செய்து வைத்திருக்கிறது.
அதேபோல் ஜனநாயகன் எந்த அளவுக்கு முதல் நாள் வசூல் பெறும் என்பதை ஒட்டு மொத்த திரை உலகமும் கவனிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது. என்னதான் இருந்தாலும் இந்த ஆன்லைன் உற்சாகம் நாளைய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எதிரொலிக்குமா? என்பதற்கான பதில் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
