அன்று ஐபிஎஸ் அதிகாரி, இன்று அரசு பள்ளியில் ஆசிரியை.. சென்னையில் பாடம் நடத்தும் சீமா அகர்வால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இவர் பணியில் இருந்தபோதே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடம் நடத்தினார். இப்போது ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இப்போது சிறப்பு அனுமதி பெற்று பாடம் நடத்துகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீமா அகர்வால் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, ஹிமாச்சல் பிரதேச மாநில கேடராக ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி ஏ.கே.விஸ்வ நாதனை திருமணம் செய்த பின்னர், தமிழக காவல்துறை யில், 1993ல் இணைந்தார். இவர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

Once an IPS officer now a government school teacher Seema Agarwal teaches in Chennai

அதேபோல் சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு, டி.ஜி.பி., மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கூடுதல் டி.ஜி.பி., காவல் துறையின் தலைமையிடத்தின் கூடுதல் டி.ஜி.பி., என, பல்வேறு முக்கிய பொறுப்புகளில், பணியாற்றியிருக்கிறார். அதேபோல் சிபிஐ, ஊழல் தடுப்புப் பிரிவு, மாநில குற்ற ஆவணக் காப்பகத்திலும் பணியாற்றி உள்ளார். இறுதியாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் கடந்த மாதம் (ஜூன்) ஓய்வு பெற்றார்.இவர் தகைசால் மற்றும் மெச்ச தகுந்த பணிகளுக்கு, மத்திய அரசின் ஜனாதிபதி பதக்கம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவர் காவல்துறையில் பணியில் இருந்த போது, சமூகத்தில் பல்வேறு விஷயங்களில் அக்கறையுடன் செயல்பட்டார். அதேபோல் பணியில் இருந்தபோதே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடம் நடத்தினார்.

இந்த சூழலில் ஓய்வு பெற்ற சீமா அகர்வால், தனது சமூக பணிக்கு ஓய்வு கொடுக்காமல், சென்னை தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6, 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணித பாடம் நடத்தி வருகிறார். இதற்காக அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததில் மாநகராட்சியும் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவர் தனது ஆசிரியை பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தினமும் காலையில் தலா 40 நிமிடம் என 2 பாட வேளையை நடத்தி வருகிறார்.

இதுபற்றி சீமா அகர்வால் கூறுகையில், ரிடையர் ஆன பின்னர் ஏழை மாணவர்களுக்காக சிறு சேவையாக செய்து வருகிறேன். மாணவர்கள் எளிதில் புரிந்து படிக்கும் வகையில் ஆங்கிலம், கணித பாடங்களை நடத்தி வருகிறேன். மாணவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியாக ஒரு அம்மாவாக இருந்து இதனை செயல்படுத்துகிறேன் என்றார்.

முன்னதாக சீமா அகர்வால் ஓய்வு பெற்ற போது, டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பேசும் பேசும்போது, சீமா அகர்​வால் மூத்த அதி​காரி மட்​டுமல்ல, அவரின் மனி​தாபி​மானமிக்க அணுகு​முறை அவரை உயர்ந்த இடத்​தில் நிறுத்​தி​ இருக்கிறது. எந்த பிரி​வில் பணி​யாற்​றி​னாலும் அதில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கு​வார். பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றப்​பிரி​வில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு விரை​வில் நீதி வழங்க நடவடிக்கை எடுத்​திருந்தார். ரயில்வே ஐஜி​யாக இருந்​த​போது விபத்​துகளை தடுக்க அதிக நடவடிக்​கைகள் மேற்​கொண்​டார். காவல்​துறை​யில் மட்​டுமல்ல, அனைத்து துறை​களை சேர்ந்​தவர்​களாலும் மதிக்​கப்​பட்​ட​வர் சீமா அகர்​வால் என்று புகழ்ந்து பேசியிருந்தார்.

அதேபோல் ஓய்வு நாளில் சீமா அகர்​வால் பேசும்​போது, "சட்​டம் ஒழுங்கு மற்​றும் புல​னாய்வு பிரிவு அல்​லாமல் சிறப்பு பிரிவு​களில் பணி​யாற்​றும்​போது எனக்கு தெளி​வான பார்வை கிடைத்​தது. தற்​போது பணி​யில் உள்ள அதி​காரி​களுக்கு ஒன்றை கூற விரும்​பு​கிறேன். பாதிக்​கப்​படும் விளிம்​புநிலை மக்​களுக்கு உறு​துணை​யாக இருக்க முடி​யு​மா, பொது​மக்​களிடம் கனி​வாக இருக்க முடி​யுமா என்​பது குறித்து நீங்​களே உங்​களை ஆய்​வுக்கு உட்​படுத்தி மக்​களுக்கு சிறப்​பான சேவை​யாற்ற வேண்​டும் என்று உருக்கமாக கோரிக்கை வைத்தார். அப்படி பேசியவர் தான், இன்று தன்னால் முடிந்த அளவு ஓய்வு காலத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளியில் ஆங்கிலம் மற்றும் கணிதம் நடத்துகிறார். இவரது உன்னதமான இந்த சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+