வச்சி செய்யப்போகும் ஏஐ.. இனி மிடில் கிளாஸ் என்ற வர்க்கமே இருக்காது! எச்சரித்த கூகுள் நிறுவன நிர்வாகி
சென்னை: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையால் வரும் காலத்தில் பெரும் ஆபத்து இருப்பதாகவும் மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருக்காது, ஒன்று பெரும் பணக்காரர் அல்லது ஏழையாக மட்டுமே இருக்க முடியும் என்று திடுக்கிடும் தகவல்களை கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயரதிகாரி வெளியிட்டுள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்ப உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம். ஏஐ பயன்பாட்டால் ஒருபக்கம் எத்தனையோ பயன்கள் ஏற்படுவதாக சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் மனிதர்களின் வேலைகளை திருட ஆரம்பித்துவிட்டது.

ஏஐயால் நடுத்தர வர்க்கம் இருக்காது
செயற்கை நுண்ணறிவால் வரும் காலத்தில் மிடில் கிளாஸ் என்ற வர்க்கமே இருக்காது என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி மோ காவ்தத் எச்சரித்துள்ளார்.
ஏஐ காரணமாக வேலைகள் கணிசமாக குறையும் என்றும், இதனால் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் என்றும் அவர் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்த காவ்தத், இந்த திடுக் தகவலை கூறியுள்ளார். வரும் 2027 முதல் நிலைமை மோசமடையத் தொடங்கும் எனக் கணித்துள்ளார்.
சமூக பிளவுகள் ஏற்படும்
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் சமூக அமைதியின்மை ஏற்படும் என்றும் மக்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையின் நோக்கத்தையும் இழப்பதால் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து, தனிமை உணர்வும், சமூகப் பிளவுகளும் ஆழமடையும் என்றும் எச்சரித்து உள்ளார். "நீங்கள் டாப் 0.1% பணக்காரர்களுக்குள் இல்லையென்றால், நீங்கள் ஒரு ஏழை விவசாயியாகத்தான் இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கம் என்பதே இருக்காது.
ஒயிட் காலர் ஜாப்ஸ் எனப்படும் வெள்ளை காலர் வேலைகள், அதாவது மென்பொருள் உருவாக்குநர்கள், சிஇஓ-க்கள், பாட்காஸ்டர்கள் என யாரும் ஏஐ-யின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது. அடுத்த 15 ஆண்டுகள் சொர்க்கத்தை அடைவதற்கு முன் நரகமாக மாறிவிடும்" என்று தெரிவித்தார். தனது Emma.love என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உதாரணமாகக் காட்டி இவ்வாறு பேசியுள்ளார் காவ்தத்.
தனெக்கென ஒரு மொழியை உருவாக்கும்
உணர்ச்சி மற்றும் உறவுசார் AI-யை உருவாக்கும் இந்த நிறுவனத்தை மூன்று பேர் மட்டுமே நிர்வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். "முன்பு இந்த மாதிரி ஸ்டார்ட்அப்களுக்கு 350 டெவலப்பர்கள் தேவைப்பட்டிருப்பார்கள். பாட்காஸ்டர்கள் கூட ஏஐ-யால் மாற்றப்படுவார்கள் " என்று அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே, 'ஏஐ-யின் காட்பாதர்' என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், ஏஐ விரைவில் தனக்கென ஒரு மொழியை உருவாக்கிக்கொள்ளும் என்றும், இதனால் மனிதர்களால் இயந்திரங்களைக் கண்காணிக்க முடியாமல் போகும் என்றும் எச்சரித்துள்ளார்.
இயந்திரங்கள் சிந்திப்பது சாத்தியம்
அதாவது, "இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பேச தங்கள் சொந்த உள் மொழிகளை உருவாக்கினால் அது இன்னும் பயங்கரமானது. அவை சிந்திக்க தங்களுக்குள் ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன், அப்போது அவை என்ன நினைக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. AI ஏற்கனவே பயங்கரமான எண்ணங்களை உருவாக்கக்கூடிய திறனை வெளிப்படுத்தியுள்ளது. மனிதர்களால் கண்காணிக்க முடியாத வகையில் இயந்திரங்கள் சிந்திப்பது சாத்தியமே" என ஹிண்டன் தெரிவித்தார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications