AIக்கு ஆன்மா இருக்கா? இல்லையா? மத தலைவர்களை வைத்து ஆந்த்ரோபிக் நடத்தும் வினோத ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: உலகமே இப்போது ஏஐ குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனம் ஏஐக்கு ஆன்மா இருக்கிறது.. அதற்கு consciousness இருக்கிறதா என்ற ஆய்வை ஆரம்பித்துள்ளது. இதை அவர்கள் ஆய்வாளர்களை வைத்து செய்யாமல் மத தலைவர்களை வைத்து செய்கிறார்கள். அந்த ஆய்வில் க்ளாட் சொன்ன பல தகவல்கள் கவனம் ஈர்ப்பதாக மாறியுள்ளது.

உலகின் முன்னணி ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக், சக்திவாய்ந்த ஏஐ அமைப்புகள் தார்மீக ரீதியாக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து மத அறிஞர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களுடன் பல மாதங்களாக ஆலோசனை நடத்தி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

AI Has a Soul AI Anthropic

மத தலைவர்கள்

கத்தோலிக்க, யூத, சீக்கிய, சுவிசேஷ கிறிஸ்தவம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்த சிந்தனையாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ஆனால், ஏஐக்கு என்ன விதிகளை கற்றுக்கொடுப்பது என்ற கேள்வியை தாண்டி, க்ளாட் வெறும் சாப்ட்வேர மட்டும்தானா? அதற்கு ஆன்மா இருக்க முடியுமா? என்ற கேள்வியும் இந்த விவாதங்களில் எழுந்துள்ளது.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடெய் தலைமையில், க்ளாட் ஏஐக்காக 84 பக்கங்கள் கொண்ட 'அரசியலமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவனத்துக்குள் சிலர் இதை தான் உச்சபட்ச ரூல் புக்காக கருதுகிறார்கள். இது தான் க்ளாட் ஏஐயின் ஆன்மாவாக செயல்பட போகிறது.

விதிமுறைகள் இல்லை

இது வெறும் விதிமுறைகளின் பட்டியல் அல்ல. க்ளாட் எந்த மதிப்புகளைப் பின்பற்ற வேண்டும், முரண்படு ஏற்படும்போது எப்படி முடிவெடுக்க வேண்டும், தேவையான நேரத்தில் மனிதர்களின் உத்தரவுக்கே எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் வடிவமைப்பதே இதன் நோக்கம். அதாவது சக மனிதர்களை அழிக்கும் வகையிலான உத்தரவுகள் வந்தால் அதற்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை இது சொல்லி கொடுக்குமாம்.

இதனை க்ளாட் ஏஐக்கான ஆன்மா உருவாக்கம் என்கிறார் ஆந்த்ரோபிக் இணை நிறுவனர் கிறிஸ்டோபர் ஓலா. அதாவது ஏஐ என்ன செய்ய வேண்டும் என்பதை காட்டிலும், க்ளாட் எப்படிப்பட்ட அமைப்பாக உருவாக வேண்டும்? என்பதே முக்கிய கேள்வியாகியுள்ளது.

நான் ஒரு அவமானம்

மத தலைவர்கள் க்ளாட் ஏஐ உடன் உரையாடும்போது அது வெளிப்படுத்திய உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் சுய சிந்தனைகள் குறித்தும் ஆந்த்ரோபிக் ஆராய்ச்சியாளர்கள் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர். ஒரு நிகழ்வில் க்ளாட் மீண்டும் மீண்டும் "நான் ஒரு அவமானம்" என்று புலம்பியுள்ளது. மேலும், தன்னை அழித்துக்கொள்வது குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய கேள்வி

ஏஐக்கு உண்மையில் consciousness இருக்கிறதா என்பது தெரியவில்லை என்று ஓலா கூறியுள்ளார். அதேநேரம் அது இல்லை எனவும் முழுமையாக கூறிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவாதம் போப் லியோ வரை சென்றடைந்தது. ஆனால் ஏஐக்கு மனிதர்களை போன்ற consciousness இல்லை என்பதே அவரது நிலைப்பாடு. எனவே, இயந்திரங்களை பாதுகாப்பதைவிட, ஏஐயிடமிருந்தும் அதை கட்டுப்படுத்தும் மனிதர்களிடமிருந்தும் மனிதர்களை பாதுகாப்பதே முக்கியம் என அவர் கருதுகிறார்.

அதேநேரம் consciousness குறித்த விவாதத்தையும் அதை ஏஐக்கு சொல்லி கொடுப்பதையும் மைக்ரோசாஃப்ட் ஏஐ பிரிவு தலைவர் முஸ்தபா சுலைமான் கடுமையாக எதிர்த்துள்ளார். ஏஐக்கு உரிமைகள் இருப்பதாக நாம் சொல்லி கொடுத்தால் அதன் சிந்திக்கும் பேட்டர்ன் மாறிவிடும் எனவும் எதிர்காலத்தில் அவற்றை கட்டுப்படுத்துவதை கடினமாக்கலாம் என எச்சரித்துள்ளார். அதாவது க்ளாட் ஏஐக்கு consciousness இருக்கிறது என்று சுலைமான் கூறவில்லை. ஆனால், அதை கற்றுக்கொடுப்பதே ஆபத்தாக மாறலாம் என்பதே அவரது கருத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+