எலான் மஸ்க் பிளானே வேற.. AIல் இவ்வளவு முதலீடு ஏன் தெரியுமா! சீக்ரெட்டை உடைத்த பிரபலம்.. ரிஸ்க் ஆச்சே

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: ஏஐ வளர்ச்சியும் அது சார்ந்த முதலீடுகளும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது மனிதர்களுக்குப் பெரியளவில் உதவினாலும் கூட இதில் சில சிக்கல் இருப்பதாக வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரபல அமெரிக்க அரசியல்வாதியும் மூத்த சமூக செயற்பாட்டாளருமான பெர்னி சாண்டர்ஸ் ஏஐ தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

இந்தக் காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. பல முக்கிய நிறுவனங்களும் கூட ஏஐ துறையில் மிக பெரிய முதலீடுகளைச் செய்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான பெர்னி சாண்டர்ஸ் ஏஐ தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

Bernie Sanders Warns of Billionaires AI Investment Motives Elon Musk Larry Ellison Under Scrutiny

ஏஐ முதலீடு

மெட்டா, அமேசான், கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகளில் முதலீடு செய்வதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அமெரிக்கர்களுக்குப் பெரிய அளவில் வேலை இழப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.. எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் ஆகியோரை குறிப்பிட்டு பெர்னி சாண்டர்ஸ் விமர்சித்துள்ளார்.

காரணம் இதுதான்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் AI மற்றும் ரோபோட்டிக்ஸில் அதிக முதலீடு செய்வதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த முதலீடுகள் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அல்ல. நம்ப முடியாத செல்வத்தைத் தங்களுக்காக உருவாக்கவும், மிகவும் பவர்புல்லான நபராக மாற்றவும் தான் இதுபோல ஏஐ துறையில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்" என்று சாடினார்.

டேட்டா சென்டர்கள் பிரச்சினை

ஏஐ டேட்டா சென்டர்கள் குறித்தும் சாண்டர்ஸ் கடுமையாக விமர்சித்தார். இந்த டேட்டா மையங்கள் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவதாகச் சாடினார். இதனால் மின் கட்டமைப்புக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும், "AI மற்றும் ரோபோட்டிக்ஸ் காரணமாக, பெரும் வேலை இழப்புகள் ஏற்படும். அமெரிக்காவில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளை நாம் கட்டலாம், ஆனால் அதில் தொழிலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள்.. ரோபோக்கள்தான் வேலை செய்யும்.. மில்லியன் கணக்கான புதிய கார்கள் மற்றும் லாரிகள் மார்கெட்டிற்கு வரும்.. ஆனால் அவற்றை டிரைவர்கள் ஓட்ட மாட்டார்கள். தானாகவே ஓடும்.

சிக்கல்

வரும் காலத்தில் பல புதிய நிறுவனங்கள் தொடங்கப்படலாம்.. ஆனால் வேலைவாய்ப்புகள் குறையும்.. பெரும்பாலான வேலைகள் செயற்கை நுண்ணறிவு பக்கம் போய்விடும். AI டேட்டா மையங்களுக்குத் தண்ணீரும் மின்சாரமும் அதிகம் தேவைப்படும் என்பதால் நாடு முழுவதும் மின் கட்டணம் உயரலாம்.. நீர்ப் பற்றாக்குறை கூட ஏற்படும்.

இந்த மாற்றங்கள் இப்போதே நடக்க ஆரம்பித்துவிட்டது. நாம் உடனடியாகச் செயல்படவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த மாற்றம் அதிகரிக்கும். தொழில்நுட்பப் புரட்சி ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மட்டும் பயனளிக்காமல், சாதாரண அமெரிக்கர்களுக்குப் பயனளிக்க வேண்டும். இதை எதிர்த்து நாம் போராட வேண்டும்" என கடுமையாகச் சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+