டெல்லி AI மாநாட்டில் பில் கேட்ஸ் பங்கேற்பதில் சிக்கல்? கடைசி நேரத்தில் டிராமா.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் இப்போது ஏஐ இம்பேக்ட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவிருந்த பில் கேட்ஸ் கடைசி நேரத்தில் எப்ஸ்டீன் விவகாரம் காரணமாகப் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியானது. இதனால் ஏஐ மாநாட்டில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் திட்டமிட்டபடி ஏஐ மாநாட்டில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ உச்சி மாநாடு இப்போது டெல்லியில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு சர்வதேச அளவில் கவனம் பெறுவதாக அமைகிறது. எதிர்காலமே ஏஐ தொழில்நுட்பத்தைச் சுற்றி இருக்கும் நிலையில், அந்தத் துறை தொடர்பாகப் பல்வேறு ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடைபெற உள்ளது.

Bill Gates in India AI summit Microsoft founder to participate Summit amid Epstein Files issue

விளக்கம்

இந்தக் கூட்டத்தில் ஏஐ மற்றும் தொழில்நுட்பத்தில் சாதித்த முக்கிய நபர்கள் பங்கேற்றுப் பேசவிருந்தனர். அதன்படி இந்த நிகழ்வில் பில் கேட்ஸ் பெயரும் இடம்பெற்று இருந்தது. இருப்பினும், திடீரென இதில் அவர் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல் வெளியானதால் குழப்பங்கள் நிலவியது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது விளக்கம் தரப்பட்டுள்ளது. ஏஐ இம்பேக்ட் உச்சி மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் திட்டமிட்டபடி தனது உரையை நிகழ்த்துவார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார். பில் கேட்ஸ் ஏஐ உச்ச மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், இதன் மூலம் அந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குழப்பம்

டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ மாநாட்டில் பில் கேட்ஸ் கலந்து கொள்ளவில்லை என முன்பு செய்திகள் வெளியாகின. ஏஐ மாநாட்டில் உரையாற்றவுள்ள சர்வதேச தலைவர்கள் லிஸ்ட்டில் பில் கேஸ்ட் பெயர் இடம் பெறவில்லை. இதன் காரணமாக பில் கேஸ்ட் பங்கேற்பாரா இல்லையா என்பதில் கேள்வி நிலவியது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தாக சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்த நிலையில், இந்த விளக்கம் இப்போது வந்துள்ளது

என்விடியா

மறுபுறம், ஏஐ உச்சி மாநாட்டில் கவனம் பெறும் முக்கிய நபராக இருந்த என்விடியா தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங் இந்தியா வரமாட்டார் என்று என்விடியா நிறுவனம் கடந்த வார இறுதியில் அறிவித்தது. சில தவிர்க்க முடியாத காரணங்கள் என்று மட்டுமே கூறப்பட்டு இருந்தது. ஜென்சன் ஏன் இந்தியா வரவில்லை என்பதற்கு முறையான விளக்கம் தரப்படவில்லை.

பில் கேட்ஸ்

இந்தச் சூழலில் தான் பில் கேட்ஸும் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஒரு வழியாக இப்போது தீர்வு கிடைத்துவிட்டது. பில் கேட்ஸ் இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். முன்னதாக ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்ற அவர், அங்குச் சில நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆந்திரா வளர்ச்சியை அவர் பாராட்டினார். அமராவதி சென்ற அவர், சுகாதாரம், விவசாயம், கல்வி போன்ற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை வெகுவாகப் பாராட்டினார்.

பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஏஐ இம்பேக்ட் உச்சி மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய ஏஐ வளர்ச்சியை உறுதி செய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+