Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு தான் மிக பெரிய ஆபத்து! பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய அரசு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இப்போது பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டு இருக்கும் சூழலில் ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் இந்தியாவுக்கு நேரடியாக ஆபத்தாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இப்போது நடந்து வருகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இந்த கூட்டத்தொடர் ஆரம்பித்தது. இரண்டாம் நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

Economic Survey 2026 AI Infrastructure Race Worse Than 2008 Crisis Particularly danger to India

ஏஐ தொழில்நுட்பம்

அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் தெளிவாகப் பேசப்பட்டு இருந்தது. உலகமே இப்போது ஏஐ குறித்தே பேசி வரும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையிலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏஐ காரணமாக ஒரு மோசமான சர்வதேச சூழ்நிலை உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பம்

2008ல் அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்கெட் சரிவால் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியை விட மோசமான அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இந்தியாவின் ஐடி வேலைவாய்ப்புகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்தப் பாதிப்பு நிகழ வாய்ப்புகள் குறைவு (10-20% வாய்ப்பு) என்றாலும் கூட இது நடந்தால் பாதிப்பு மிக மோசமாக இருக்குமாம். தொழில்நுட்ப மீறல், புவிசார் அரசியல், நிதி நெருக்கடி மோதல் என வரிசையாகப் பல தோல்விகள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் AI டூல்களை அதிகம் பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்புத் துறை பாதிக்கப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக பெரிய ஆபத்து

ஏஐ துறையில் ஏற்படும் சரிவு, புவிசார் அரசியல் அல்லது வர்த்தக இடையூறுகளால் மோசமடைந்து, சர்வதேச பணப்புழக்கத்தைக் குறைத்து, மூலதன வளர்ச்சியை முடக்கும். இதனால் உலக நாடுகள் தற்காப்பு நடவடிக்கைகளில் இறக்கலாம். 2008 உலகளாவிய நிதி நெருக்கடியை விட இது மோசமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளைவுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமானவை. நாட்டின் ஐடி, சேவைத் துறை ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இது இந்தியாவின் வேலைவாய்ப்புகளின் முதுகெலும்பாகும். டிசம்பர் 2022ல் ஏஐ வருகைக்கு பிறகு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இடையேயான தொடர்பில் கட்டமைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டியது

இந்த வேலைவாய்ப்புத் துண்டிப்பு நுட்பமானது, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்தது. வேலைகள் ஒரே இரவில் மறைந்துவிடவில்லை என்ற போதிலும் வளர்ச்சிக்கு இணையாக வேலைவாய்ப்புகள் இல்லை என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாற்றம் எல்லாத் துறைகளிலும் நடப்பதில்லை. டிஜிட்டல்மயமாக்கம் குறைவாக இருக்கும் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

இந்திய மாடலுக்கு ஆபத்து

இதன் மூலம், AIயானது தொழில்நுட்பம் மற்றும் அலுவலகம் சார்ந்த வேலைகளை மட்டுமே குறிவைக்கிறது என்பது தெளிவாகிறது. இதனால் உலக நிறுவனங்களுக்குக் குறைந்த செலவில் IT சேவைகளை வழங்கும் இந்தியாவின் மாடல் இப்போது ஆபத்தில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு இத்தகைய பணிகளை வேகமாக, மலிவாகச் செய்யும்போது, இந்தியாவின் தேவை குறைகிறது.

மேலும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், பொறுப்பான AI பயன்பாட்டிற்கு வழிகாட்டவும் ஒரு 'செயற்கை நுண்ணறிவு பொருளாதாரக் குழு' (AI Economic Council) அமைக்க இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+