ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. ஐபோனில் வரும் மிக பெரிய மாற்றம்.. கூகுளுக்கும் அடிக்குது ஜாக்பாட்!
சியாட்டில்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளது. இதற்காக அவர்கள் ஜெமினி ஏஐ உடன் கைகோர்த்துள்ளது. இது மட்டும் வெற்றிகரமாகத் திட்டமிட்டபடி நடந்தால் ஆப்பிள் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை அடையும். மேலும், ஆப்பிள் மட்டுமின்றி இது கூகுளின் ஜெமினிக்கும் வெற்றியையே தரும்!
உலகளவில் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக இருப்பது ஆப்பிள். அவர்களின் ஐபோன் மாடல்களுக்கு உலகெங்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐபோனை வாங்கக் காத்திருக்கும் மக்களே இதற்குச் சாட்சி. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் மீதும் ஐபோன் மீதும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

ஆப்பிள்
அதாவது ஏஐ படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதை ஆப்பிள் நிறுவனம் கோட்டைவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்கள் மொபைலில் AIஐ ஒருங்கிணைக்கிறார்கள். குறிப்பாக வாய்ஸ் அசிஸ்டன்ட் பிரிவில் ஏஐ கேமை மொத்தமாக மாற்றிவிட்டது. ஆனால், ஆப்பிள் ஐபோன்களில் சிரி இன்னும் மேம்படவே இல்லை.
சிரியில் AIஐ இணைத்து புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்துவது குறித்து நீண்ட காலமாகவே பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இதற்காகக் கூகுள் நிறுவனத்தின் 'ஜெமினி' (Gemini) ஏஐ உடன் ஆப்பிள் கைகோர்த்துள்ளது. முதற்கட்டமாக ஜெமினி ஏஐ உடன் இயங்கும் சிரி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜூலை மாதம் நடைபெறும் "2026 WWDC" மாநாட்டில் ஜெமினி பவர்ட் சிரி முழுமையாக அறிமுகப்படுத்தப்படும்.
சிரி
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2010இல் ஐபோனுக்காக முதலில் 'சிரி' வாய்ஸ் அசிஸ்டென்ட்டை அறிமுகப்படுத்தியது. பிறகு ஆப்பிளின் அனைத்துச் சாதனங்களிலும் சிரி ஒருங்கிணைக்கப்பட்டது. ஒரு காலத்தில் வாய்ஸ் அசிஸ்டென்ட் என்றாலே சிரி தான் பிரதானமாக இருந்தது. அதில் பெஞ்ச் மார்க்கை செட் செய்தது. ஆனால், சமீபத்திய காலங்களில் அது பின்தங்கிவிட்டது. சாட்ஜிபிடி, ஜெமினி, கோபைலட் ஆகியவை அதை காலி செய்துவிட்டது. 2024 WWDC மாநாட்டிலேயே ஆப்பிள் இந்தச் சிக்கலை ஒப்புக்கொண்ட நிலையில், ஏஐ உடன் கூடிய அடுத்த ஜெனரேஷன் சிரியை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்தது.
ஏஐ இதற்காக முதலில் சொந்தமாக ஏஐ மாடலை உருவாக்க முயன்றது. இருப்பினும், அதில் வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகே ஏஐ நிறுவனங்களுடன் கைகோர்க்க முடிவு செய்தது. முதலில் இது தொடர்பாக OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிகச் செலவு காரணமாக Anthropic உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஓபன் ஏஐ உடனான பேச்சுவார்த்தையும் சில காரணங்களால் தோல்வியில் முடிந்தது.
ஜெமினி
மறுபுறம், கூகிளின் ஜெமினி மாடல்கள் முதலில் சொதப்பினாலும் பிறகு சீக்கிரமே அது மேம்பட்டது. இப்போது ஆப்பிளுக்கு இணக்கமான விதிமுறைகளை அது வழங்குகிறது.. அதன்படி ஜெமினி இப்போது 'சிரி' மற்றும் பிற ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உடன் இணைந்து செயல்படும். இது ஆப்பிளின் பிரைவேட் கிளவுட் கம்ப்யூட் (Private Cloud Compute) சர்வர்களில் செயல்படும் எனத் தெரிகிறது..
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
பிப்ரவரி மாதம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நிலையில், சில வாரங்களில் பீட்டா சோதனை வெளியிடப்படும். எல்லாச் சோதனைகளும் முடிந்த பிறகு ஜூலை மாதம் இதை முழுமையாக வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் ஏஐ பிரிவிலும் விட்ட இடத்தை ஆப்பிள் பிடித்துவிடும்.! அதேபோல ஜெமினி ஏஐயால் ஒரே நேரத்தில் பல கோடி ஆப்பிள் யூசர்களை சென்றடைய முடியும். இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல இரு தரப்புக்குமே பெரிய லாபம்!
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications